மோட்டிவேஷன்?
திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகி இருந்த ஒரு இளம் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தேன். நல்லதொரு கேட்டட் கம்யூனிட்டி அப்பார்ட்மெண்ட்டில் குடி இருக்கிறார்.
அவர் திருமணத்துக்கு முன் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியில் இருந்தவர். திருமணத்துக்குப் பிறகு வேலையை விட்டு விட்டார். அவர் கணவன் சிறிய பிசினஸ் செய்கிறார்.
‘ஏன் வேலையை விட்டுட்டீங்க?’ என்றேன்.
‘கல்யாணம் ஆனதால்…’ என்றார்.
‘அதனால் என்ன?’
‘இல்ல அவங்க வீட்ல விட்டுடச் சொன்னாங்க…’
‘அப்போ உங்களுக்கு ஒரு மோட்டிவேஷன் இல்லாமல் போயிடுமே… நாள் முழுக்க வீட்டில் என்ன செய்வீங்க?’
‘இங்க எல்லோரும் நல்லா பேசுவாங்க… எதிர் வீட்டு ஆண்ட்டி சூப்பரா பழகறாங்க… அடுத்த வீட்டு அக்கா அன்பா பேசுவாங்க…’
‘அது இல்ல, உங்களுக்கென லைஃபில் ஒரு மோட்டிவேஷன் இல்லாம போயிடுமே?’
‘நான் தான் இங்க எல்லோர் கிட்டேயும் நட்பாயிட்டேனே… லைஃப் நல்லா போயிட்டிருக்கு…’
‘அது இல்லம்மா, மோட்டிவேஷன்… மோட்டிவேஷன்… உனக்குன்னு தனிப்பட்ட மோட்டிவேஷன்…. எய்ம்… குறிக்கோள்…’ என மனதுக்குள் அவருக்குப் புரியும்படி கேட்பதற்கான கேள்வி அழகாக வடிவமெடுத்தது. ஆனாலும் நான் எதையும் தொடர்ந்து கேட்கவில்லை.
மோட்டிவேஷன் என்பதற்கே அர்த்தம் புரியாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தவரை நானும் அப்பாவியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தேன்.
இந்தக் காலத்து இளைஞர்களிலும் இப்படியும் சிலர்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 9, 2022 | புதன் கிழமை