அகத்தின் Better Version தான் புறத்தின் பொலிவு

அகத்தின் Better Version தான் புறத்தின் பொலிவு!

இன்று உங்கள் முகம் பொலிவாக இருக்கும் என காலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிடர் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு நாளில் மட்டும் நம் முகம் எப்படி பொலிவாக இருக்கும் என சிரித்தபடி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

ஜோதிட ரீதியாக கோள்களின் / கிரஹங்களின் இடத்துக்கு ஏற்ப மனதிலும் எண்ணத்திலும்கூட மாற்றங்கள் ஏற்படும் என்ற உண்மை தெரிந்தாலும் பொதுவாக மற்றவர்கள் சிந்திக்கும் கோணத்தில் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தோம்.

பொலிவு என்பதை அழகு என்று எடுத்துக் கொள்ளாமல் பூரணத்துவம் அல்லது நிறைவு என எடுத்துக் கொண்டால் நமக்கு நாமே பொலிவாகத் தோன்றும் தருணங்கள் நிறைய உண்டு.

ஆத்மார்த்தமாக நாம் ஒரு பணியை செய்து முடிக்கும்போது அது கொடுக்கும் மன நிறைவு நம் அகத்தைப் பொலிவாக்கும். அகம் பொலிவாகும் போது முகமும் பொலிவாகும்.

நமது அகத்தின் Better Version தான் புறத்தின் பொலிவு என்பது.

– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

நவம்பர் 10, 2022 | வியாழன்

(Visited 1,883 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon