#கவிதை: அழகுக் குழந்தைகள்!

அழகுக் குழந்தைகள்!

குடும்ப நிகழ்ச்சி ஒன்றில்
முதன் முறை நம்மைப் பார்க்கும்
சுட்டியிடம்
‘அத்தை’ – ன்னு கூப்பிடு
‘பாட்டி’- ன்னு கூப்பிடு
என்று சொல்லிக்கொடுக்கும்
உறவினர்கள் வார்த்தைகளை எல்லாம்
காதில் ஏற்றிக் கொள்ளாமல்
நம்மை மேலும் கீழும் பார்த்துவிட்டு
நான் ‘அக்கான்னுதான்’ கூப்பிடுவேன்
எனச் சொல்லி அடம் பிடிப்பதுடன்
அப்படியே நம்மை அழைக்கும்
குட்டிக் குழந்தைகள்தான்
எத்தனை பேரழகு!

(Picture of the baby is used here With the permission of her parent!)

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 14, 2022 | திங்கள்

#காம்கேர்_கவிதை #compcare_kavithai

(Visited 117 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon