தட்ஸ் ஆல். அவ்ளோதான்!
பொதுவாக சொல்வார்கள்… ‘நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? மன அழுத்தத்தில் உள்ளீர்களா? சோகமாக உணர்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். தனியாக அமர்ந்துகொண்டு உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை செய்யுங்கள். ஸ்ட்ரெஸ் அட்ரெஸ் இல்லாமல் ஓடிவிடும்.’
ஆனால் அது அப்படி இல்லை. மிகவும் ’ஸ்ட்ரெஸ்’ ஆக இருந்தாலோ அல்லது தலைவலி உடல் வலி போன்ற உபாதைகள் இருக்கும்போதோ, நமக்கு மிகவும் பிடித்த வேலைகளை செய்ய நம் மனம் ஒத்துழைக்காது.
உதாரணத்துக்கு பாட்டு கேட்பது உங்கள் உயிர் என்றால், அதைக் கூட உங்களால் முழு ஈடுபாட்டுடன் கேட்க இயலாது. இனிக்கும் இன்னிசைக் குயில்களின் குரல்கள் கூட மண்டைக்குள் நாராசமாக ஒலிக்கும். இதுதான் உண்மை.
இயற்கையின் அதிசயம் என்ன தெரியுமா?
நாம் வழக்கமாக செய்யும் வேலைகளைத் தவிர வழக்கமும் பழக்கமும் இல்லாத புதிதாக ஏதேனும் ஒன்றை செய்ய ஆரம்பித்தால் மனம் நாய் குட்டி போல வாலை ஆட்டிக்கொண்டு நம் பின்னால் ஓடி வரும்.
அதற்காக புதிதாக ஒன்றை கற்கச் சொல்லவில்லை. வீட்டை சுத்தம் செய்வது, பாத்ரூம் க்ளீன் செய்வது, கலைந்திருக்கும் புத்தக அலமாரியை அடுக்கி நேர்த்தியாக்குவது இப்படி ஏதேனும் ஒன்றைச் செய்யலாம். இந்த திசைமாற்றல் உத்தி நல்ல பலன் கொடுக்கும். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.
அதாவது, வழக்கமாக செய்யும் ரொட்டீனை மாற்றச் சொல்கிறேன்.
தட்ஸ் ஆல். அவ்ளோதான்!
That’s all. So Simple!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 12, 2022 | திங்கள்