குழந்தைகளைக் குழப்ப வேண்டாமே!
சுமார் பத்து பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு வரை முன்பின் தெரியாத குழந்தைகளை பயணங்களிலோ, எங்கேனும் வரிசையில் நின்று கொண்டிருக்கும் போதோ அல்லது சாலைகளிலோ பார்த்தால் கண் சிமிட்டி சிரிப்பேன்.
ஆனால் இப்போதெல்லாம் செய்வதில்லை.
காரணம் குழந்தைகளைப் பொறுத்தவரை நான் யாரோ ஒருவர்.
குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்வோரும் யாரோ ஒருவர்.
அவர்களும் அப்படியே கண் சிமிட்டி சிரித்து தூண்டில் போட்டால் குழந்தைக்கு யார் சரியான நபர், யார் தவறான நபர் என்று எப்படித் தெரியும்?
நம்மால் ஊரில் உள்ள எல்லா குழந்தைகளையும் காப்பாற்ற முடியாது. ஆனால் நம்மால் குழந்தைகளைக் குழப்பாமல் இருக்க முடியுமே. அதையாவது நாம் செய்வோமே!
அன்பைக் கூட அடக்கி வாசிக்க வேண்டிய காலக்கொடுமையில் வாழ்கிறோம். வேறென்ன சொல்ல?
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 13, 2022 | செவ்வாய்