அப்போ நீங்க ஹீரோவா, வில்லனா?
ஒரே நடிகர் ஒரு சினிமாவில் ஹீரோவாகவும், மற்றொன்றில் வில்லனாகவும் வலம் வருவார். இதேதான் நடிகைக்கும். சில படங்களில் ஹீரோயின், சிலவற்றில் வில்லி.
ஹீரோ ஹீரோயின்களாக நடிக்கும்போது அவர்கள் பேரழகன், பேரழகிகளாகவும், வில்லன் வில்லியாக நடிக்கும்போது அவர்கள் கோரமாகவும், வெறுக்கும்படியும் நம் கண்களுக்கும் மனதுக்கும் தோன்றுகிறதல்லவா?
ஒரே நடிகர், நடிகைதான். ஆனால் நடிப்பதைப் பொறுத்து உருவமும், குணமும் மாறுகிறதல்லவா?
சினிமாவோ, சீரியலோ, மேடை நாடகமோ அது வெறும் கதைதான், நடிப்புதான் என தெரிந்திருந்தாலும் நம் மனதுக்குள் விருப்பும் வெறுப்பும் மாறுபடுகிறதல்லவா?
அதுபோல்தான் வாழ்க்கையிலும். எல்லா விஷயங்களையும் நேர்மறையாகவே அணுகும் நபர்களை உற்று நோக்குங்களேன். அவர்கள் பேரழகன் / பேரழிகிகளாகத் தோன்றுவார்கள். எதிர்மறையாகவே சிந்திக்கும் நபர்கள் முகத்தில் அத்தனை லட்சணம் இருக்காது.
லட்சணமும், அவலட்சணமும் மேக் அப்பினால் வருவதல்ல. மனதில் தோன்றும் எண்ணங்களினால் வருவது.
ஹீரோவா, வில்லனா?
அழகனா அருவெருக்கத்தக்கவனா?
இவை எல்லாம் அவரவர் எண்ணங்களைப் பொறுத்தது.
That’s all. அவ்ளோ தான்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 21, 2022 | புதன்