சிந்தாமல் சிதறாமல்!
‘பரபரப்பான நிறுவனப் பணிகளுக்கிடையே எப்படி இப்படி சின்னச் சின்ன விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நினைவிலும் வைத்துக்கொண்டு செயல்பட முடிகிறது?’
– என் உறவினர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும், எங்கள் நிறுவனப் பொறியாளர்களுக்கும் அவர்களின் / அவர்களின் வாரிசுகளின் சாதனைகள் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்கும்போதும், குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது என எந்த விசேஷமாக இருந்தாலும் நேரில் செல்ல முடியாவிட்டால் நிகழ்ச்சி குறித்து போனில் விசாரிக்கும்போதும் அவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி இதுதான்.
என் பதில் அன்றும் இன்றும் என்றும் எப்போதும் ஒன்றுதான்.
‘இப்படி சின்னச் சின்ன விஷயங்களுக்கும் நான் செலவிடும் பொன்னான நேரம்தான் என்னை நான் சார்ஜ் செய்துகொள்ள உதவும் டெக்னிக். அதுவே நான் செய்யும் பெரிய பெரிய வேலைகளுக்கு உத்வேகமாக இருக்கிறது. ஊக்கம் அளிக்கிறது. என்னிடம் இருக்கும் சிறு துளி அன்பை சிந்தாமல் சிதறாமல் அப்படியே எடுத்து கொடுத்தால் மட்டுமே நான் உற்சாகமாக ஓட முடிகிறது. இல்லை என்றால் நான் வெறும் இயந்திரமாக உணர்வேன். உடலும் மனமும் Dry ஆகிவிடும். சோர்வாகிவிடுவேன்.’
எழுதுவதற்காகவோ, நான் இப்படியாக்கும் என சொல்லிப் பெருமைப்படுவதற்காகவோ இதை எழுதவில்லை.
உண்மையில் இப்படித்தான் வாழ்கிறேன். இது எனக்கு பிடித்தமானதாக உள்ளது.
நாம் எல்லோருமே அடிப்படையில் அப்படித்தான். ஆனால் அதை உணராமல் பெரும்பாலானோர் தங்கள் உற்சாகத்துக்கு வேறெதைதையோ தேடுகிறார்கள், கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப் போல!
That’s all. அவ்ளோ தான்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 20, 2022 | செவ்வாய்