பெண் எனும் புது லாஜிக்!
மருத்துவர்கள், சில நோய்களுக்கு மென்மையான மருந்துகளை பரிந்துரைப்பார்கள். சில நோய்களுக்கு ஸ்டீராய்ட் போன்று கடுமையான மருந்துகளை பரிந்துரை செய்வார்கள். தேவையில்லாமல் ஸ்டீராய்ட் கொடுக்க மாட்டார்கள். அவசியம் தேவை என்றால் மட்டுமே கொடுப்பார்கள். அப்படி செய்து அந்த நோயை கீழிறக்கி அதன் தாக்கத்தைப் படியவைத்து பின்னர் வழக்கமான மருத்துவ முறைகளை பின்பற்றுவார்கள்…’
இதே லாஜிக்கைதான் ’ஜெய ஜெய ஜெய ஹே!’ திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சில விஷயங்களுக்கு பொறுமை எல்லாம் வேலைக்கு ஆகாது. அதிரடி தான் ஒரே தீர்வு. பின்னர் அதிரடியை குறைத்துக்கொண்டு பொறுமையாக போராடலாம்.
இதை வயிறு வலிக்க சிரிக்க வைத்து காமெடியாகவே வலுவான கருத்தை திரைப்படமாக்கியுள்ளார்கள்.
ஒரு பெண்ணாக இந்த படத்தை அத்தனை ரசித்தேன். ‘அட பெண் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்… இத்தனை நாளாய் தமிழ் திரைப்படங்களில் இப்படி ஒரு லாஜிக்கை வைத்து எந்த படமும் வரவில்லையே?’ என யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
ஆம். இது மலையாள திரைப்படம்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 25, 2022 | ஞாயிறு