Inner Wheel District 323 மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை இணைந்து நடத்திய ஸ்ரீசக்தி +ve 2022 நிகழ்ச்சி மார்ச் 26, 2022 மாலை 6.30 மணிக்கு Zoom Meeting மூலம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு ஸ்ரீசக்தி2022 (Shree Shakthi 2022) விருது வழங்கி கெளரவித்தார்கள்.
யார் யாரெல்லாம் தன் கடின உழைப்பால் வாழ்க்கையில் உயர்ந்து அந்த வளர்ச்சியில் தன்னைச் சார்ந்தவர்களையும் இணைத்துக்கொண்டு செயல்படுகிறார்களோ, அவர்களை நினைக்கும் போதெல்லாம்,
வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
என்ற திருக்குறள் நினைவுக்கு வருவதை தவிர்க்கவே முடிவதில்லை. ஏன் என் வாழ்க்கையில் எனது ஏற்றத் தாழ்வுகள் கூட எனது எண்ணம், சொல், செயல் இவற்றால் மட்டுமே என திடமாக நம்புகிறேன்.
தண்ணீரின் அளவுக்கு ஏற்ப தாமரை மலர்களின் உயரம் இருக்கும். அதுபோல நம் ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப நம் வாழ்வின் வளர்ச்சியும் அமையப்பெறும். நம் வாழ்வின் வளர்ச்சியில் பிறரையும் இணைத்துக்கொண்டுச் செல்வது வரம் அல்லவா?
அந்த வகையில் நேற்று ‘வெள்ளத்தனைய மலர்நீட்டம்’ என்ற திருக்குறளுடன் சேர்ந்து எனக்கு நினைவுக்கு வந்தவர், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் உயர்திரு. கிரிஜா ராகவன் அவர்கள்.
25 ஆண்டுகளுக்கும் மேலான புரிந்துணர்வில் எத்தனையோ கருத்தரங்குகள், கட்டுரைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என இணைந்து செயல்பட்டிருக்கிறோம். நேற்று என் உழைப்பை அங்கீகரித்து ‘ஸ்ரீசக்தி’ விருது வழங்கி கெளரவித்தார்.
அன்பையும், வாழ்த்தையும்விட வேறென்ன சொல்வது, வேறெப்படி உயர்வாக சொல்வது?
அன்பும், வாழ்த்துகளும் மேடம்!
நன்றி!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மார்ச் 27, 2022