உலகின் ஆகப் பெரிய உசுப்பேத்தல் என்ன தெரியுமா?
‘மேடம், அவங்கல்லாம் உங்க கால் தூசிக்குக் கூட சமமாகமாட்டார்கள்…’
அவரவர் கால் தூசி கூட அவரவர் அடி எடுத்து வைக்கும் அழுத்தத்துக்கு ஏற்பத்தானே ஒட்டும். பிறகெதற்கு அதை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டும்?
தூசி என்பது வெறும் தூசி அல்ல!
தட்டிவிட்டுக் கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும். தூசி உசுப்பேத்தலை எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது. கண்டுகொண்டால் தூசியே பாறாங்கல்லாய் மனதுக்குள் ஏறி உட்கார்ந்து கனக்கும். கவனம்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
மே 15, 2023 | திங்கள்
(Visited 782 times, 1 visits today)