‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல் (MARCH 2017)

2017 -ம் வருடம் பொதிகையில் ஒளிபரப்பான நேர்காணல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது. காரணம். அந்த நேர்காணல் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் வெளியான என் 100-வது புத்தகம் குறித்தும், எங்கள் நிறுவன தயாரிப்புகள் குறித்தும் என் ஒட்டுமொத்த 25 வருட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் அற்புத வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். 30 நிமிட நிகழ்ச்சி. அதுவும் ‘நேரலை’ (Live) என்பது குறிப்பிடத்தக்கது.   https://youtu.be/b05d3j8Bh3Y?t=1572

மேலும், இந்த நேர்காணல் என் பெற்றோரையும் பெருமைப்படுத்தியது என்பதில் எனக்குப் பேரானந்தம். இந்த நேர்காணல் குழந்தை வளர்ப்பு, பெற்றோர்-குழந்தைகள் ரிலேஷன்ஷிப் போன்றவற்றுக்கு சிறந்த முன்னுதாரணம் என் பெற்றோர் என பலரிடம் பாராட்டை பெற்றது.

தூர்தர்ஷன் – பொதிகையில் என்னுடைய நேர்காணலுக்காக அன்புடன் அழைப்பு விடுத்திருந்த, அதில் தலைமைப் பொறுப்பில் உள்ள திருமிகு. ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள், நேர்காணல் முடிந்ததும் ‘Hats off to your parents’ என்று தகவல் அனுப்பி வாழ்த்தைத் தெரிவித்திருந்தார்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
அக்டோபர் 5, 2017

(Visited 111 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon