போட்டோஷாப் காபி!
போட்டோஷாப்பில் ஓவியங்கள் வரையும் போதோ அல்லது ஏதேனும் வடிவமைக்கும்போதோ மஞ்சள் கலரை தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் சிவப்பு, பச்சை, நீல கலர்களை கூட்டியோ குறைத்தோ செய்துகொண்டே வரும்போது ஒரு கட்டத்தில் நாம் தேர்ந்தெடுத்த மஞ்சள் கலர் சம்மந்தமே இல்லாத அல்லது நாம் எதிர்பார்க்காத ஊதா நிறக் கலரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும்.
அதுபோல்தான், பாலைக் காய்ச்சி சர்க்கரை கலந்த பின்னர், காபி டிகாஷனை பதவிசாக கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல விட்டு காபி கலக்கும்போது நாம் விரும்பும் ‘ஸ்ட்ராங்’ காபி நிறத்துக்கு கொஞ்சம் கீழ் வந்து நிற்கும். சரி இன்னும் சொட்டு டிகாஷன் விட்டு நாம் விரும்பும் ‘ஸ்ட்ராங்’ காபி நிறத்தைக் கொண்டு வந்துவிடலாம் என்று கூடுதலாக ஒன்றிரண்டு சொட்டு டிகாஷன் விடும்போது அது நாமே எதிர்பார்க்காத கருங் காபி நிறத்துக்கு மாறிவிடும்.
ஆக, ‘ஸ்டார்ங்’ காபி கலக்கும் லாஜிக் என்பது கருங்காபி நிறத்துக்கும், அந்த நிறத்துக்குக் கொஞ்சம் கீழ் உள்ள லைட் காபி நிறத்துக்குமான இடைவெளியில் உள்ளது.
நம்புங்கள்… ஒவ்வொரு முறை காபி கலக்கும்போதும் எனக்கு போட்டோஷாப் வண்ணங்கள்தான் நினைவுக்கு வரும்.
புகைப்படக் குறிப்பு: Ai-ல் வரைந்தது!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஆகஸ்ட் 18, 2023 | வெள்ளிக்கிழமை