#Ai: தரம்!

தரம்!

வணக்கம் மேடம். ஏஐ உலகில் இனி நடக்கப் போவது என்ன? அறிமுக வகுப்பு – என் மகள் கோபிகாவிற்கு தாங்கள் வழங்கியதற்கு முதலில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சனிக்கிழமை வகுப்பில் அவள் கலந்து கொண்ட போது, நான் அந்த சமயம் வீட்டிற்கு வர வேண்டிய ஒரு காரணத்தால், அவளைச் சந்திக்கும் போது, காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு மிக கவனமாக கவனித்துக் கொண்டிருந்தால், என்னை பார்த்ததும் மலர்ந்த முகத்துடன் கை விரல்களால் முத்திரை காட்டினாள். ‘தரம்’ என்று சொல்வதற்கு அம்முத்திரையை அவள் காட்டுவது வழக்கம். ஞாயிறு வகுப்பை முடித்த பிறகு, நான் கேட்டபோது ‘மிகப் பிரமாதம். எனக்கு எல்லா வகையிலும் பிரயோஜனமாயிருந்தது.’ என்றாள். வகுப்பு முடிந்த போதே மேடத்திடம் நன்றி சொல்லி விட்டேன் என்று கூறினாள். ஒரு மறக்க முடியாத நிகழ்விற்கு என் நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முருகேஷ் பாலகிருஷ்ணன்
விருதுநகர்
ஆகஸ்ட் 14, 2023

(Visited 349 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon