ஆத்மார்த்தமான விஷயங்கள்!
ஒருவர் நம்மிடம் சில விஷயங்களை ஆத்மார்த்தமாக பகிர்ந்திருக்கிறார் என்றால் *மறந்தும்* அதை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது *உத்தமம்* என்றால்…
அந்த விஷயத்தை *அவர்களிடமே கூட* நீங்கள் இப்படி என்னிடம் ஆத்மார்த்தமாக சொல்லி இருந்தீர்கள் என கூறி பெருமைப்பட்டுக் கொள்ளாமலோ அல்லது எடுத்தாளாமலோ அல்லது நினைவு கூறாமலோ இருப்பது *படு உத்தமம்*.
ஏனெனில் நாம் சொன்னதை நம்மிடமே கூறுபவர்களின் நோக்கம் ‘ஆஹா பாருங்கள் நான் எப்படி நீங்கள் சொன்னவற்றை எல்லாம் நினைவில் வைத்திருக்கிறேன்’ என்றோ அல்லது ‘ஆஹா பாருங்கள் உங்களை நான் எந்த அளவுக்கு மனதுக்கு நெருக்கமாக வைத்திருக்கிறேன்’ என்றோ பெருமைப்பட்டுக் கொள்வதாக இருக்கலாம். ஆனால், அப்படிச் சொல்பவர்கள் மீது நம்பிக்கையின்மை மட்டுமே உண்டாகும்.
நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ… நம்மிடம் ஆத்மார்த்தமாக சொன்னவர் என்ன மனநிலையில் பகிர்ந்தாரோ என்னவோ, நாம் அதை திரும்ப நினைவுப்படுத்தாமல் கடப்பதுதானே உத்தமம்.
மறத்தல் அற்புதம், மறதி அதி அற்புதம்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஆகஸ்ட் 26, 2023 | சனிக்கிழமை