சேவாலயா மாணவ மாணவிகளுக்கு Ai வெபினார்!
எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் மூலம் 2023 ஆகஸ்ட் மாதம் முதல், ஒவ்வொரு வாரமும் ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ, இனி நடக்கப் போவது என்ன?’ என்ற நிகழ்ச்சியை ஆன்லைனில் (Webinar) நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.
ஆகஸ்ட் 12, 2023 மற்றும் ஆகஸ்ட் 13, 2023 தேதிகளில் சேவாலயா பள்ளியில் +1, +2 படிக்கின்ற 20 மாணவ மாணவிகளுக்கு எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக ஸ்பான்சர் செய்ய உத்தேசித்து, தகுதியான 20 மாணவ, மாணவர்களை அவர்களையே தேர்ந்தெடுத்துக் கொடுக்கச் சொல்லி இருந்தோம். இரண்டு நாட்கள், தினமும் 2 மணி நேரம். ஆக மொத்தம் 4 மணி நேர நிகழ்ச்சி.
அதன்படி சேவாலயா மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 20 மாணவ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து ஆன்லைனில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு மாணவருக்கு ரூபாய் 2000 என்று 20 மாணவர்களுக்கு ரூபாய் 40,000 மதிப்புள்ள வகுப்பினை சேவாலயா பள்ளி மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கினோம்.
சேவாலயா மாணவ மாணவிகள் அனைவரும் மிக சிறப்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி குறித்து சேவாலயா பள்ளி மாணவ மாணவிகள் சிறு வீடியோ தொகுப்பு ஒன்றை பரிசளித்தார்கள்.
சேவாலயாவில் இருந்து ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளைக்கு அனுப்பிய கடிதம்!