கல்வியின் பெருமை!
திருட்டையே தொழிலாக (!) வைத்திருக்கும் ஒரு திருடன் (பெற்றோர்) கூட தன் பிள்ளைகளைப் பார்த்து ‘நான் தான் படிக்கலை… வீணாப் போயிட்டேன். நீங்களாவது நல்லா படிங்க…’ என்றுதான் மனம் விட்டுப் புலம்புவான்(வார்கள்) தனிமையில்.
ஆனால் படித்த பெற்றோர் யாரும் நாங்கள்தான் படிச்சு வீணாப் போயிட்டோம். நீங்களாவது படிக்காம நல்லபடியா இருக்கன்னு சொல்ல மாட்டார்கள்.
முதல்வகைப் பெற்றோரின் மனநிலைக்கும் இரண்டாம்வகைப் பெற்றோரின் மனநிலைக்கும் இடைப்பட்ட இடைவெளியில்தான் கல்வியின் பெருமை உள்ளது.
முக்கியக் குறிப்பு: இங்கு எல்லோரும் கல்வி குறித்து எழுதுவதால் என்ன சம்பவம் நடந்துள்ளது என யூகிக்க முடிந்தது. நான் என் வாழ்நாளில் பிக்பாஸ் பார்த்ததில்லை. இனியும் பார்ப்பதாக இல்லை. ஏன் சிந்தித்ததுகூட இல்லை. இந்தப் பதிவு கல்விக்கு ஆதரவாக மட்டுமே!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 9, 2023 | திங்கள்