புத்தகங்கள் கொடுத்த பரிசு!
இன்று மாலை 4 மணி, என் மனதுக்கு மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
இன்று காலையில் எழுதிய பதிவில் Ai – காக இரண்டு புத்தகங்கள் எழுதி முடித்துள்ளேன் என வெகு நாசூக்காக பதிவுகளின் ஊடே பட்டும் படாமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை போலவும் இல்லாமல் அறிவிக்காததை போலவும் இல்லாமல் சொல்லி இருந்தேன்.
அதனை ஒட்டி மதுரையைச் சேர்ந்த ஒரு கல்லூரிப் பேராசிரியையிடம் இருந்து வாட்ஸ் அப் தகவல். அவர் Ai-லேயே பி.எச்.டியும் செய்கிறார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு Ai புத்தகங்கள் வெளியானதும் தகவல் கொடுங்கள் என கேட்டிருந்தார்.
என் உதவியாளர் அந்தத் தகவலை எனக்குக் காட்டியவுடன் அவரை தொடர்பு கொண்டு பேசினேன்.
கல்லூரியில் படிக்கும் மகனுக்குத் தாய்,
Ai-ல் பி.எச்.டி செய்பவர்,
கல்லூரிப் பேராசிரியை, துறைத்தலைவர்,
தன் கல்லூரி மாணவர்களுக்கு நான் எழுதிய பல புத்தகங்களை ரெஃபரென்ஸ் புத்தகமாக வைத்திருப்பது
என தொடங்கி நிறைய மகிழ்ச்சித் தகவல்களை தூவிச் சென்றார்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இரண்டு விஷயங்கள் மனதைக் கொள்ளைக் கொண்டன.
அவர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே நான் எழுதியப் புத்தகங்களை படித்துப் பயன்பெற்றிருப்பதாகவும்,
நான் என் பெற்றோர் குறித்து எழுதும் பதிவுகளை ரசித்து ரசித்துப் படிப்பதாகவும், அப்போது அந்தப் பதிவுகளில் தன்னையும் இணைத்துக்கொண்டு மகிழ்வதாகவும் கூறினார்.
இவ்வளவு நடந்திருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்காதா பின்னே?
நன்றி அந்தப் பேராசிரியைக்கு!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 13, 2023 | வெள்ளி