#Ai: புகைப்பட ஜாலங்கள்!

புகைப்பட ஜாலங்கள்!

நேற்று ஒரு அன்பர் ‘தினம் ஒரு Ai’ தொடரில் நீங்கள் ஏன் உங்கள் புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது?’ என கேட்டிருந்தார்.

சொல்ல நினைத்த பதில்: தினமும் Ai -ல் என் புகைப்படத்தை வெளியிட்டால் அது ஃபேஷன் ஷோ போல் ஆகிவிடும். Ai மீது உங்கள் அனைவருக்கும் வெறுப்பைக் கூட்டும் என்பதால் என் புகைப்படத்தைப் பயன்படுத்தவில்லை. மாறாக, நான் எப்படி வரையச் சொல்கிறேனோ அதன்படி Ai வரைந்து கொடுத்த ஓவியங்களைப் பயன்படுத்தி வருகிறேன்.

பொது நலன் கருதி, அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் இங்கு நான் அளிக்கும் பதில்:

Ai மூலம் படம் வரைவது (உருவாக்குவது, ஓவியம் தீட்டுவது) என்பதில் இரண்டு வகை உண்டு.

ஒன்று, நம் புகைப்படத்தை இன்புட்டாகக் கொடுத்து, Ai-யிடம் ஏற்கெனவே இருக்கும் புகைப்பட மாடலை வைத்துக்கொண்டு நம்மை வரையச் சொல்வது (Ai with Photo Reference),

இரண்டாவது, Ai – டம் எந்த மாடல் புகைப்படத்தையும் கொடுக்காமல் என்ன தேவையோ அதை டைப் செய்து கட்டளை இட்டு வேலை வாங்குவது. (Ai with Prompting).

இன்று வெளியிட்டுள்ள படத்தில் இடப்பக்கம் உள்ளது Ai with Photo Reference என் புகைப்படத்தை கொடுத்து ஓவியமாக்கியுள்ளேன். வலப்பக்கம் உள்ளது Ai with Prompting என் தேவையை Ai-க்கு டைப் செய்து கட்டளை இட்டு, வரைந்து வாங்கி உள்ளேன்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 20, 2023 | வெள்ளி

(Visited 9,032 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon