#Ai: 32-ம் ஆண்டில் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர்!

32-ம் ஆண்டில் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர்!

அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள். இதுபோன்றதொரு சரஸ்வதி பூஜை நன்னாளில் 1992-ஆம் ஆண்டு காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கினோம். அப்போது எடுத்த இந்தப் புகைப்படத்தின் மூலம் Ai தொழில் நுட்பம் வாயிலாக 2023-ம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இந்த Ai வீடியோவில் என்ன சொல்லி இருக்கிறேன் என்பதையும் கேளுங்கள்.

அந்த வீடியோவில் ஒரு சிறப்பம்சம் உண்டு.

வீடியோவில் உள்ள புகைப்படம் எடுக்கப்பட்ட காலம் 1992. அப்போதுதான் கம்ப்யூட்டர் தொழில்நுட்பமே நம் நாட்டில் மெல்ல அடி எடுத்து வைத்திருந்தது. என் அன்றைய புகைப்படத்தை, 2023-ல் என் குரலால் பேசுவதைப் போல வடிவமைத்துள்ளேன். இப்போது Ai தொழில்நுட்பம் மெல்ல வளர்ந்து வரும் காலம்.

1992 யும், 2023 யும் இணைத்து Ai வீடியோவாக்கி உள்ளேன். இதுதான் இந்த Ai புகைப்பட வீடியோவின் சிறப்பு. இடைப்பட்ட இந்த காலக்கட்டமே எங்கள் காம்கேரின் வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது.

இறை அருளால் எங்கள் வளர்ச்சி தொடர பிரார்த்தித்துக் கொண்டு ஒரு புது ப்ராஜெக்ட்டை தொடங்கி உள்ளோம்.

இறைவனுக்கும், இயற்கைக்கும், பெற்றோருக்கும், உடன் பிறந்தோருக்கும், எங்கள் காம்கேரில் எங்களுடன் பணிபுரிந்த, பணி புரியும் அனைத்து பொறியாளர்களுக்கும், எங்கள் தயாரிப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி வரும் உலகளாவிய எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 24, 2023 | செவ்வாய்

(Visited 1,125 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon