#Ai: Respect Knowledge!

சிலர் தங்கள் துறையில் Ai ஐ எப்படி பயன்படுத்துவது என்று நட்பு ரீதியில் ஆலோசனை கேட்கிறார்கள். ‘ஜஸ்ட் லைக் தட்’ பதில் சொல்லி கடந்து விட முடியாது. ஏனெனில் Ai ஒரு கடல். ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த நெட்வொர்க் Ai.

எனவேதான் நான் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அவர்களுக்கு 3 வழிகளை சொல்கிறேன்.

  1. நான் Ai காக எளிய தமிழில் எழுதியுள்ள அசத்தும் Ai Part1, Part2 நூல்களை வாங்கி படிக்கச் சொல்கிறேன்.
  2. ஆன்லைனில் ஜூமில் / கூகுள் மீட்டில் நான் நடத்துகின்ற கருத்தரங்குகளில் கலந்து கொள்ள சொல்கிறேன்.
  3. எங்கள் காம்கேரில் கன்சல்டன்சி எடுத்துக் கொள்ளச் சொல்கிறேன்.

Ai குறித்து என்னிடம் கேட்கப்படும் ஆலோசனைக்கான பதிலை நான் 10 நிமிடத்தில் சொல்லிவிட முடியும்தான். ஆனால் அந்த 10 நிமிட பதிலுக்கான உழைப்பின் பின்புலம் என் வாழ்க்கையில் நான் செலவழித்த 32 வருடங்கள்.

Ai குறித்து பேச அழைப்பவர்கள் கூட ஜஸ்ட் நீங்கள் 1/2 மணி நேரம் பேசினால் போதும் என்றுதான் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அதாவது, ‘1/2 மணி நேரம் தான், அதனால் ஜஸ்ட் நட்பு ரீதியாக வந்து உரை நிகழ்த்திவிட்டுச் செல்லுங்கள்’ என்பதுதான் அவர்களின் நோக்கம்.

நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்துகிறேன்.

10 நிமிட ஆலோசனை ஆனாலும் சரி, 30 நிமிட உரையானாலும் சரி, என் 32 வருட உழைப்பில் விளைந்த அறிவைத்தான் பகிர்கிறேன். இன்னமும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டும், உழைத்துக் கொண்டும்தான் இருக்கிறேன்.

என் 32 வருட உழைப்பினால்தான் உங்கள் Ai குறித்த சந்தேகத்துக்கான ஆலோசனையை 10 நிமிடத்தில் பதில் சொல்ல கற்றிருக்கிறேன். அதுபோல 30 நிமிடம் என்ன 3 மணி நேரம்கூட மேடையில் பிசிறில்லாமல் என் பேச்சின் மூலம் Ai குறித்த விழிப்புணர்வை தருவதற்கும் என் 32 வருட அனுபவம்தான் முழுமுதற் காரணம்.

ஆகவே, என் ஆற்றலை 10 நிமிடங்கள், 30 நிமிடங்கள் என நிமிடங்களுடன் ஒப்பிடாதீர்கள். 3 Decade – களுடன் ஒப்பிடுங்கள்.

Respect Knowledge!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஏப்ரல் 18, 2024 | வியாழன்

(Visited 1,989 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon