எத்தனை பெருமைமிகு தருணம்?
Mind Blowing Picture!
வயநாட்டின் முண்டக்கையில் நிலச்சரிவுக்குப் பிறகு, இரவும் பகலும் கடும் அயராத முயற்சியினால் 190 அடி நீளமுள்ள எஃகுப் பாலத்தை 31 மணி நேரம் தொடர்ச்சியாக பணிபுரிந்து வெற்றிகரமாக கட்டி முடித்ததுள்ளது ராணுவம்.
இந்த ப்ராஜெக்ட்டுக்குத் தலைமை தாங்கியவரும், இந்த சாதனைக்குக் காரணமானவரும்தான் இந்தப் புகைப்படத்தில் பெய்லி பாலத்தில் கம்பீரமாக நிற்கும் மேஜர் சீதா ஷெல்கே என்ற ராணுவப் பொறியியலாளர்.
கனமழை மற்றும் வெள்ளத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இப்பாலத்தில் மீட்புப் பணிகளுக்கு அத்தியாவசியமான வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும், இது அடுத்தகட்ட மீட்புப் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை வழங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.
இவரைப் போன்று களத்தில் இறங்கி தன்னலமற்று நாட்டுக்காக சேவை செய்யும் பெண்களைப் பார்த்தால் மனம் முழுக்க சந்தோஷம் நிரம்பித் தளும்புகிறது.
Big Salute to Major Sita Shelke!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஆகஸ்ட் 2, 2024 | வெள்ளிக்கிழமை