இசைக் கச்சேரிக்கு செல்பவர்கள் இசையை ரசிப்பார்கள். கூடுதலாக அங்கு கேண்டீன் போட்டிருந்தால் அந்த உணவு வகைகளை சுவைத்து சிலாகிப்பார்கள்.
இன்று என்னிடம் பேசியவர் சொன்ன விஷயம் இன்றைய பொழுதை இலகுவாக்கியது. இவரும் இசைக் கச்சேரிக்கு சென்றுதான் என்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளார்.
இன்று மதியம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து ஒரு போன் கால். பேசியவர் திருச்சியில் தாசில்தாராய் இருந்து ஓய்வு பெற்றவர் (64).
திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் ரசிக ரஞ்சனா சபாவினர் இந்த வருடம் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார்கள்.
நேற்றைய நிகழ்ச்சிக்கு இடையில் அங்குள்ள அலுமினி சுவற்றில் (Alumni Wall) தொழில் / வேலை சார்ந்த வாழ்க்கையில் சாதனை செய்து வரும் முன்னாள் மாணவிகளின் பெயர் மற்றும் புகைப்படத்தை பார்வையிட்டிருக்கிறார். அந்த வரிசையில் முதன் முதலாக போடப்பட்டிருந்த என்னுடைய பெயரையும், புகைப்படத்தையும் பார்த்துவிட்டு என்னைப் பற்றிய குறிப்புகளை இன்டர்நெட்டில் தேடி இருக்கிறார்.
முதன் முதலாக ஐடி நிறுவனம் தொடங்கியதில் இருந்து அண்மையில் தமிழில் Ai பற்றிய நூல்கள் இரண்டை வெளியிட்டதுவரை தெரிந்து கொண்டு பாராட்டிப் பேசினார்.
வெளிநாட்டில் எம்.எஸ் படித்து வரும் தன் மகன் குறித்தும், அவருக்கு வேலை வாய்ப்புகள் குறித்தும், எங்கள் காம்கேரில் அவருக்கு வேலை வாய்ப்பு ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்தும் பேசினார். 64 வயதில் தான் தொலைதூரக் கல்வியில் எம்.சி.ஏ சேர்ந்து படித்து வருவதையும் கூறி அறிமுகம் செய்து கொண்டார்.
‘போன் செய்து தொந்திரவு செய்தமைக்கு மன்னிக்கவும். தவறாக நினைக்காதீர்கள்…’ என கூறினார். இரண்டு புத்தகங்கள் (அசத்தும் Ai – Part1, இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் – Ai – Part2) ஆர்டர் செய்துள்ளார்.
போன் செய்து பாராட்டி, புத்தகங்களையும் வாங்கியவரிடம் ‘தொந்திரவெல்லாம் இல்லை. உங்கள் நேர்மையான பாராட்டு எனக்கும் மகிழ்ச்சியே’ என்று கூறி உரையாடலை முடித்துக் கொண்டேன்.
பொதுவாக, அந்த நேர்காணல் மூலம் உங்களை பற்றி தெரிந்து கொண்டேன்…
இந்த அலுவலகத்தில் உங்கள் சாஃப்ட்வேரை பயன்படுத்தி வருவதை பார்த்து உங்களை தெரிந்து கொண்டேன்…
இந்த கல்லூரியில் உங்கள் நூல் பாடத்திட்டமாக இருக்கிறது அதைப் பார்த்து உங்களை அறிந்து கொண்டேன்…
சிங்கப்பூர் நூலகத்தில் உங்கள் நூலை பார்த்தேன்…
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உங்களைப் பார்த்தேன்…
பத்திரிகையில் உங்கள் கட்டுரை பார்த்தேன்…
என்றெல்லாம் என்னிடம் அறிமுகம் செய்து கொள்பவர்கள் என்னைப் பாராட்டி கேட்டிருக்கிறேன்.
இன்றுதான் முதன் முதலில் ‘நீங்கள் படித்த கல்லூரியில் Alumni Wall – ல் உங்கள் புகைப்படம்தான் முதலாவதாக இடம் பெற்றுள்ளது… அதன் மூலம் உங்களை அறிந்தேன்’ என ஒரு அன்பர் சொல்லி கேள்விப்படுகிறேன். (Link in Comment)
மிகவும் சந்தோஷமாக இருந்தது. இன்றைய பொழுது இப்படியாக…
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஆகஸ்ட் 6, 2024 | செவ்வாய்