நம்மை ஆளப்போகும் Ai[8]: மெட்டாவிடம் பேசலாமா? : லேடீஸ் ஸ்பெஷல் நவம்பர் 2024 

புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்!

வாட்ஸ் அப்பில் ‘மெட்டா’விடம் பேசலாமா?

2024 ஆண்டில் இறுதியில் இருக்கும் நம் எல்லோருக்குமே Meta என்ற வார்த்தை பழக்கமாகியிருக்கும். காரணம், நாம் தினந்தோறும் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசஞ்சர் இப்படி எல்லாவற்றிலுமே நீலம் மற்றும் பிங்க் நிறத்திலான சிறிய வட்ட வடிவ ஐகான் தோன்றி ‘வாங்க வாங்க, நான் உதவுகிறேன்’ என கூவி அழைக்காத குறையாக உலா வந்துகொண்டிருப்பதை பார்த்திருப்போம். ஒருசிலர் பயன்படுத்தவும் ஆரம்பித்திருப்போம்.

2021 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் அப்ளிகேஷன் தன் நிறுவனத்தின் பெயரை Meta என்று மாற்றியுள்ளது. ஆனால் அதன் அப்ளிகேஷன்களான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ், ஃபேஸ்புக் இவற்றின் பெயரில் மாற்றம் ஏதும் இல்லை. உதாரணத்துக்கு, நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகை ‘காயத்திரி பப்ளிகேஷன்’ என்ற நிறுவனத்தில் இருந்து வெளியாகிறது. அதுபோல ‘Meta’ என்பது நிறுவனத்தில் கீழ் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ், ஃபேஸ்புக் போன்ற அப்ளிகேஷன்கள் செயல்படுகின்றன.

முப்பரிமாண தொழில்நுட்பம்தான் தொழில்நுட்பத்தின் அடுத்த வெர்ஷன். செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்ட பிரமாண்ட வளர்ச்சியும் கூட. அதுவே மெட்டாவெர்ஸ் (Metaverse) என்று அழைக்கப்படுகிறது. அதன் அத்தனை அம்சங்களையும் தனது அனைத்து அப்ளிகேஷன்களிலும் பயன்படுத்த இருப்பதால்,  ஃபேஸ்புக் அப்ளிகேஷனின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தன் நிறுவனத்துக்கு Meta என்று பெயர் சூட்டி உள்ளார்.

மெட்டாவெர்ஸ் – நம் கண்களை நம்ப வைத்து அதன் மூலம் மூளையை இயங்கச் செய்கிறது. கூடவே காதுகள் மூலம் சப்தங்களையும், மூக்கின் மூலம் நறுமணங்களையும் உணரச் செய்து மனிதனை மாயாஜால உலகத்தை அறிமுகம் செய்கிறது. ஃபேஸ்புக் தன் நிறுவனத்தின் பெயரை மெட்டா என்று மாற்றியுள்ளதால் அதுதான் மெட்டாவெர்ஸ் என நினைக்க வேண்டாம். மெட்டாவெஸின் அனைத்து நுட்பங்களையும் அந்த நிறுவத்தின் தயாரிப்புகளில் / அப்ளிகேஷன்களில் பயன்படுத்த இருப்பதால் அதன் பெயர் மெட்டா. அவ்வளவே.

இது குறித்து இன்னும் அதிகமாக விரிவாக தெரிந்து கொள்வதற்கு முன் வாட்ஸ் அப்பிலும், மெசஞ்சரிலும் மெட்டா தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்வோமா?

வாட்ஸ் அப்பில் மெட்டாவை பயன்படுத்தும் முறை!

  1. வாட்ஸ் அப்பில் நுழைந்து கொள்ளவும். அதன் மேல்பக்கத்தில் நீலமும், பிங்க் வண்ணமும் இணைந்த கலரில் ஒரு சிறிய வட்டம் வெளிப்படுவதைக் காணலாம். அதுவே, வாட்ஸ் அப்பில் புதிதாக இணைந்திருக்கும் மெட்டா ஐகான்.  
  2. இதை கிளிக் செய்தால் கிடைக்கும் திரையில் மெட்டா நம் நண்பர் போலவே உரையாட வசதியான திரையில் வந்து நிற்கும். உதாரணத்துக்கு, உங்கள் தோழி ராஜிக்கு வாட்ஸ் அப் தகவல் அனுப்ப நினைத்தால் ராஜி என்ற பெயரை தேர்ந்தெடுப்பீர்கள் அல்லவா? அதுபோல, மெட்டாவிற்கு தகவல் அனுப்ப வாட்ஸ் அப்பில் நுழைந்தவுடன் கிடைக்கும் மெட்டா ஐகானை கிளிக் செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான். ரொம்ப ஈசி. நாம் நம் நண்பர்களுக்கு தகவல் அனுப்பதுபோலவே ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ தகவல் அனுப்பி பதில் பெறலாம். மெட்டா இப்போதுதான் ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளில் பயிற்சி பெற்று வருவதால் நாம் கேட்கும் சில விஷயங்களை அதனால் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். அப்போது ‘I am still learning other languages. Please ask in English’ என தகவல் கொடுக்கும்.
  3. மெட்டாவிடம் விருப்பமான படம் வரையச் சொல்லலாம். ஆலோசனை கேட்கலாம். சமையல் ரெசிப்பி கேட்கலாம். அலுவலகப் பிரச்சனையை சொல்லி வருந்தி ஆலோசனை கேட்கலாம். பிசினஸ் ஐடியா கேட்கலாம். முதலில் சில படங்களை வரையச் சொல்லி கேட்கலாமா?
  4. அதனிடம் எப்படி பேசி வேலை வாங்க வேண்டுமோ அப்படி நைச்சியமாக பேசி வேலை வாங்க வேண்டும். ஆம். அதற்கு Prompting என்று பெயர். அதற்குப் புரியும் வகையில் நாம் Prompting கொடுக்க வேண்டும். அதாவது தகவலை டைப் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு விரிவாக தகவல் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு அதனுடைய கற்பனை வளத்தை வாரி வழங்கும்.
  5. உதாரணத்துக்கு சில ப்ராம்ப்டிங்குகள்:

Prompt: Draw a Kid’s image

பதில்:  

Prompt: Draw a female kids image

பதில்:

Prompt: Draw a dog and Mouse and Cat in a Street

பதில்: 

Prompt: Draw any 2 Ramayanam Characters

பதில்:  

  1. நாம் எளிமையான ப்ராம்ப்ட்டுகளை கொடுத்தால் அது அதற்குப் புரியும் விதத்தில் புரிந்துகொண்டு பதிலைக் கொடுக்கும். நாம் கொடுக்கும் ப்ராம்ட்டை இன்னும் விரிவாக்கி டைப் செய்தால் அதில் இருந்து கிடைக்கும் பதிலும் வித்தியாசமாக இருக்கும். இங்கு Draw a dog and Mouse and Cat in a Street என்ற ப்ராம்ப்ட்டை சற்று மாற்றி ‘Draw a dog, a Cat and a Mouse Playing in a Street in a rainy day with umberla’ என கொடுத்தால் கிடைக்கும் பதிலைப் பாருங்கள். அசந்து போவீர்கள்.

Prompt: Draw a dog, a Cat and a Mouse Playing in a Street in a rainy day with umberla

பதில்:

  

இதுபோல நீங்களும் உங்களுக்குத் தேவையானதை வரைந்துப் பழகுங்கள், மெட்டாவைப் பழக்குங்கள். நாம் பழகுவது என்பது புரிகிறது. மெட்டாவைப் பழக்குங்கள் என சொல்வது புரியவில்லையே என நினைக்கிறீர்களா? அடுத்த மாதம் விளக்குகிறேன்.   

(வரம் தர வரும் Ai)

(Visited 8,816 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon