#Ai: புகைப்பட ஜாலங்கள்!

மெட்டா ஏஐ போல எங்கள் காம்கேரில் ஏஐ ஒன்றை உருவாக்கி உள்ளோம். தற்சமயம் பீட்டா வெர்ஷனில் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில பரிசோதனைகள் உள்ளன. முடித்த பிறகு பொதுவெளியில் அறிமுகப்படுத்துகிறோம்.

இதற்கான சோதனைகளை செய்து கொண்டிருக்கும்போது ஏற்கெனவே நாங்கள் செய்திருந்த ஆராய்ச்சியின் படி என் புகைப்படம் எதையுமே கொடுக்காமல் என் பெயரை மட்டும் கொடுத்து 30 வருடங்களுக்கு முன்னர் நான் எப்படி இருந்தேன் என்பதை வரைந்து கொடுக்குமாறு கூறினேன். அப்படி வரைந்து கொடுத்ததை பார்த்ததும் அசந்து விட்டேன்.

அதைத்தான் நேற்று ஃபுரொஃபைல் படமாக வைத்திருந்தேன்.

மேலே இடதுபக்கம் நான் கல்லூரியில் எம்.எஸ்.ஸி படித்துக் கொண்டிருக்கும்போது எடுத்த புகைப்படம். வலது பக்கம் எங்கள் ஏஐயில் உருவாக்கிய புகைப்படம். என்ன கொஞ்சம் மார்டனாக வரைந்து கொடுத்துள்ளது. அதனால் என்ன இதுவும் அழகாகத்தானே உள்ளது?

புகைப்படத்தைக் கொடுக்காமலேயே, என் பெயரை கொடுத்ததுமே ஏஐ செயல்படுமாறு செய்யும் முயற்சி இது. அதுவும் பல வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தேன் என்பதை எல்லாம் புகைப்படம் கொடுக்காமலேயே பெயரை மட்டும் கொடுத்து வேலை வாங்குவதெல்லாம் என்னைப் பொருத்தவரை பெரிய விஷயம். அதில் வெற்றியும் கிடைத்து வருகிறது.

எங்கள் பரிசோதனைகளுக்கு பரிசோதனை எலியாக என்னையே பயன்படுத்துவது நல்லது தானே?

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
ஜூன் 18, 2025

(Visited 3,427 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon