விக்டரி கிங்:  காம்கேர் கே. புவனேஸ்வரியின் உலகின் முதல் ஏஐ கதை (சென்னை தினமலர், ஜனவரி 2, 2026)

 தினமலர் இணையதளத்திலேயே வாசிக்க:
https://www.dinamalar.com/weekly/pokkisham/victory-king-kamkhair-bhuvaneswaris-worlds-first-ai-story/4118439

‘உலகிலேயே முதன்முறையாக, AI தொழில்நுட்பத்தின் பிரம்மாண்டத்துடன்! காம்கேர் புவனேஸ்வரியின் அசாத்திய உழைப்பில் உருவான ‘விக்டரி கிங்’ -என்ற இவரது தந்தையின் சுயசரிதை. வெறும் எழுத்தாக அல்லாமல் ஒரு சினிமா பார்க்கும் அனுபவத்தை தனது AI மூலம் காட்சிப்படுத்தியுள்ளார், வரலாற்றில் முதலிடமும் தனியிடமும் பிடிக்கப்போகும் இந்த அரிய படைப்பை, காம்கேர் புவனேஸ்வரியின் பரிசாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது.பார்த்தபின் இது வெறும் சுயசரிதை அல்ல, AI-யின் எதிர்காலச் சாத்தியக்கூறுகளை உணர்த்தும் ஒரு புதிய அத்தியாயம்!என்பதை உணரமுடிந்தது.

‘AI தொழில்நுட்பத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும், ஆனால் அதனிடம் இல்லாத ஒன்று ‘உணர்வு’ (Emotions). அந்த உணர்வுகளைத் தொழில்நுட்பத்தோடு இணைக்கும் வித்தையை அறிந்தவர்தான் காம்கேர் புவனேஸ்வரி!’

இன்று உலகமே AI (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. எளிமையாகச் சொன்னால், மனித மூளை சிந்திப்பதைப் போலவே கணினிகளையும் மென்பொருட்களையும் சிந்திக்க வைக்கும் தொழில்நுட்பமே AI. தரவுகளை பகுப்பாய்வு செய்வது முதல், கட்டுரைகள் எழுதுவது, படங்கள் உருவாக்குவது என மனித ஆற்றலுக்குப் பெரும் துணையாக இது உருவெடுத்துள்ளது.

இந்தத் தொழில்நுட்பப் புரட்சியில் 1992-லேயே காலடி எடுத்து வைத்தவர் காம்கேர் புவனேஸ்வரி. காம்கேர் சாஃப்ட்வேர் (Compcare Software) நிறுவனத்தின் நிறுவனர். கடந்த 34 ஆண்டுகளாகத் தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். தன் நிறுவனத்தின் மூலம் தாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர், அனிமேஷன், ஏஐ தயாரிப்புகளை அந்தந்த காலகட்டத்திலேயே புத்தகங்களாக எழுதி வெளியிட்டு வருகிறார். அதன் எண்ணிக்கை 250-ஐ தொட்டுள்ளது.

2003-ல் கூகுள் எல்லாம் பிரபலமாவதற்கு முன்பே திருவாசகம் ஆன்மிக படைப்பில் தேடு வசதிகளை எல்லாம் பொருத்தி கண் பார்வைத் திறன் அற்றவர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிட்டவர்.அவர்களுக்காக ஸ்க்ரைபர்ஸ் உதவியுடன் தேர்வு எழுதாமல், அவர்கள் தாங்களே வாயால் சொல்ல சொல்ல கம்ப்யூட்டர் திரையில் பதில்கள் தானாகவே வெளிப்படுமாறு சாஃப்ட்வேர்கள் எல்லாம் தாயாரித்து வெளியிட்டுள்ளோம்.

புவனேஸ்வரி அவர்கள் வெறும் மென்பொருள் தயாரிப்பாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். 2025-ம் ஆண்டின் இறுதிக்குள் இவரது வழிகாட்டுதலில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்துள்ளது என்பது ஒரு மாபெரும் மைல்கல்.பல்வேறு துறைகளுக்குத் தேவையான AI மென்பொருட்களைத் தயாரித்து வழங்குவதுடன், பள்ளி, கல்லூரிகளில் AI குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.ஆங்கில இதழான ‘Mixed Bag’-ல் AI குறித்து எழுதியதற்காக ‘Best Writer in English’ விருதைப் பெற்றுள்ளார். பல தமிழ் பத்திரிகைகளிலும் இவரது தொழில்நுட்பக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.1992 முதல் ஆடியோ, வீடியோ, எழுத்து எனப் பல ஊடகங்கள் வாயிலாகத் தொழில்நுட்பத்தைப் பரவலாக்கி வரும் இவரது உழைப்பு அசாத்தியமானது.

தன்னுடைய 34 ஆண்டுகால உழைப்பிற்கும், அறிவுத்திறனுக்கும் முத்தாய்ப்பாக ஒரு சாதனையைச் செய்துள்ளார் புவனேஸ்வரி. கடந்த 2025, டிசம்பர் 9-ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு, தனது தந்தையின் சுயசரிதையை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரித்து வெளியிட்டுள்ளார்.தந்தை: வி. கிருஷ்ணமூர்த்தி, தாய்: கே. பத்மாவதி.இதில் வரும் பாடல்களை எழுதியதும், இசை அமைத்ததும், காட்சி அமைத்ததும், பின்னணி வடிவமைப்பை செதுக்கியதும் என A-Z அனைத்தும் காம்கேர் கே. புவனேஸ்வரி. இதுபோன்ற விஷயங்களை எல்லாம் நாங்கள் அனிமேஷன் காலத்திலிருந்தே செய்து வருவதால் எனக்கு இது கடினமாக இல்லை.

விகே (எ) விக்டரி கிங்’ என்ற தலைப்பில் உருவான இந்தச் சுயசரிதை, உலகிலேயே AI மூலம் உருவாக்கப்பட்ட முதல் ஆட்டோபயோகிராஃபியாகும்.

‘என் வளர்ச்சியைப் பற்றிப் பேசுவதை விட, என் அறிவையும் ஆற்றலையும் கொண்டு என் பெற்றோரின் வாழ்வை ஆவணப்படுத்துவதே எனக்குப் பெருமை,’ என்கிறார் அவர் நெகிழ்ச்சியுடன்.

இந்த ஏஐ சுயசரிதை பொது வெளியில் விரைவில் வெளியாகப் போகிறது என் மீது கொண்ட மரியாதை காரணமாக எனக்கு அதன் லிங்கை அனுப்பியிருந்தார்.

மிகப்பிரமாதமாக இருந்தது பலரும் இருக்கும் ஆடிட்டோரியாக இருந்தால் எழுந்து நின்று கைதட்டவே செய்திருப்பேன் அந்த அளவிற்கு உணவு பூர்வமாக இருந்தது.

அவரது அம்மாவும்,அப்பாவும் ‘டிரங்கால்’ போட்டு பேசும் காலத்தில் ஒரே துறையில் வெவ்வேறு இடத்தில் பணியாற்றியவர்கள் தொழில்ரீதியாக குரல் மூலம் பழகியவர்கள் பின்னர் மனம் ஒருமித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடித்து இல்லறம் எனும் நல்லறம் கண்டவர்கள்.

அவர்களின் காதலை எவ்வளவு கண்ணியமாக காட்டமுடியுமோ அந்த அளவிற்கு காட்டியுள்ளார்.அந்தக் காதல் படிப்படியாக வளர்ந்து திருமணம் வரை செல்வதே இந்த நிஜக்கதை.

படம் ஆரம்பித்து அப்படித்தான் சொல்லவேண்டும் அந்த அளவிற்கு தத்ரூபமாக சினிமா போலவே உள்ளது படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே அவர்களுடன் ஒன்றிவிடுகிறோம்.ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

சரி இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா நமது வரலாற்றில் பலரது வீரக்கதைகள் உள்ளன மராட்டிய மன்னர் சிவாஜி தொட்டு முதல்வர் சமீபத்தில் துவக்கிவைத்த பொல்லான் என்ற வீரனின் சிலை வரை நம்மிடம் இருப்பது ஒரு சில வரைபடம் அல்லது ஒரு சில புகைப்படம்தான்.இதை வைத்து சம்பந்தப்பட்வர்களின் கதையை அதன் தன்மை குறையாமல் விஷீவலாக கொடுக்கமுடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்ற பதிலை தனது இந்த படம் மூலம் புவனேஸ்வரி தந்திருக்கிறார் என்றுதான் சொல்லமுடியும்.

யாரும் தன் மீது விரல் அல்ல விரலின் நிழலைக்கூட நீட்டி குறை சொல்லவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருப்பவர் ஆகவே இந்த ஏஐ கதைக்காக யாருடைய பாடலையும் இசையையும் எடுத்துக் கொள்ளாமல் தானே பாடல் எழுதி இசையும் அமைத்துள்ளார்.

உண்மையச் சொல்லப்போனால் இந்த கதைக்கு அந்த பாடலும் பாடல் இடம் பெற்ற சூழ்நிலையும் பெரிய பலம்.

படத்தில் இடம் பெற்றுள்ள பாடலின் சில வரிகள்

முகம் பார்க்கவில்லை… முகவரி மட்டும் அறிவேன்… குரல் கேட்ட பின்பு… என் குறை யாவும் மறப்பேன்!தந்தி வழியே வந்த சேதி… தந்தது ஒரு பாதி… கடிதம் வழியே கண்ட வார்த்தை… சொன்னது மறுபாதி!

நீல மயிலே… நான் கண்டது உன் விழியோ? நேரில் வராமலே… நீ தந்தது ஒரு வலியோ?தபால்காரன் வரும் நேரம்… தவிக்குது என் உள்ளம்… உறை பிரித்து படிக்கும் போது… ஊறுது தேன் வெள்ளம்!வார்த்தை எல்லாம் தீர்ந்து போச்சு… மௌனம் பேசுதே… வரி வடிவைக் காணும் போது… வாசம் வீசுதே!

எங்கிருந்தோ பேசும் குரல்… என்னை வருடுதே… எதிர் முனையில் நீ சிரித்தால்… இதயம் உருகுதே… கம்பி வழி மின்சாரம்… காதல் கடத்துதே…கற்பனையில் உன் உருவம்… கனவில் நடத்துதே… தொலைபேசி மணி ஓசை… கோவில் மணியாச்சோ? தொலைவில் நீ இருந்தும்… துயரம் பறந்தாச்சோ?

தாய்,தந்தைக்கு இதைவிட பெரும் சிறப்பு செய்துவிட முடியாது.

‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற திருமூலரின் வாக்கிற்கேற்ப, தான் கற்ற தொழில்நுட்பத்தை உலகுக்கு நற்பயன் தரும் வகையில் பயன்படுத்துவதில் இவர் உறுதியாக இருக்கிறார். 2026-ம் ஆண்டில் பொதுவெளியில் வெளியாக உள்ள இந்த AI சுயசரிதை, தொழில்நுட்பம் எப்படி உணர்வுகளுக்கு உயிர் கொடுக்க முடியும் என்பதற்கு ஒரு சான்றாக அமையும்.

இவருடைய தொழில்நுட்பப் பயணம், வருங்காலத் தலைமுறைக்கு ஒரு சிறந்த வழிகாட்டி!

கூடுதில் விவரம் பெற தொடர்பு கொள்ளவும் WhatsApp: 9444949921 (Message Only)

எல்.முருகராஜ்
தினமலர்

(Visited 5,689 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon