
உலகிலேயே முதல் முதலாக தமிழில் Ai தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சுயசரிதை!
சுயசரிதை பெயர்:
‘விகே (எ) விக்டரி கிங்’ – ‘VK Alias Victory King’ (This is the World First Autobiography in Ai)
சிறப்பு:
உலகிலேயே முதல் முதலாக Ai தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சுயசரிதை
பிற சிறப்புகள்:
3 சீசன்களாக உள்ளன. ஒவ்வொரு சீசனிலும் 7 பகுதிகள். மொத்தம் 21 பகுதிகள். முதல் சீசனில்: அப்பாவின் பிறப்பு முதல் திருமணம் வரை. இரண்டாம் சீசனில் : குழந்தைகளை வளர்த்த விதம். மூன்றாம் சீசனில்: பிள்ளைகள் அப்பா அம்மாவை பற்றி சொல்லும் பகுதி.
இயக்குனர்:
காம்கேர் கே. புவனேஸ்வரி. கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்கும் முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்றவர். (M.Sc., Computer Science). அதைத் தொடர்ந்து எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.
1992 ல் காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐடி நிறுவனத்தை தொடங்கியவர். இந்தியாவில் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய முதல் பெண் பொறியாளர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றவர். 1992-ல் இருந்து தொடர்ச்சியாக 33 வருடங்களுக்கு மேலாக காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தன் நிறுவனத்தின் மூலம் தாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர், அனிமேஷன், ஏஐ தயாரிப்புகளை அந்தந்த காலகட்டத்திலேயே புத்தகங்களாக எழுதி வெளியிட்டு வருகிறார். அதன் எண்ணிக்கை 250-ஐ தொட்டுள்ளது.
தான் கற்றதையும், பெற்றதையும் இந்த சமுதாயத்துக்கு தன் எழுத்து, பேச்சு, ஆடியோ, வீடியோ என அத்தனை மீடியாக்கள் மூலம் திருப்பித் தந்து வருகிறார்.
கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை தமிழில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றதில் காம்கேர் புவனேஸ்வரிக்கும், இவரது காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்திக்கும் பெரும் பங்குண்டு.
இவரது பெற்றோர்:
தந்தை: திரு. வி. கிருஷ்ணமூர்த்தி, தாய்: கே. பத்மாவதி. இருவரும் தொலைபேசி துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள். விரைவில் சதாபிஷேகம் கொண்டாட இருக்கும் இந்த தம்பதிக்கு அவர்கள் குழந்தைகள் காம்கேர் கே. புவனேஸ்வரி, ஸ்ரீவித்யா ஐயர், சுவாமிநாதன் இவர்கள் மூவரும் கொடுக்கும் பரிசாக இந்த ஆட்டோபயோகிராஃபி அமையும்.
ஏற்கெனவே தன் அம்மாவின் ஆட்டோபயோகிராஃபியை எடுத்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ என்ற பயோகிராஃபியை, தன் பெற்றோருக்கும் தங்களுக்குமான பிணைப்பை 1-1/2 மணி நேரம் ஓடக் கூடிய படமாக ஷீட்டிங் எடுத்து இயக்கி உள்ளார் காம்கேர் கே. புவனேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.
உடன் பிறந்தோர்:
தங்கை: ஸ்ரீவித்யா ஐயர், தம்பி: கே. சுவாமிநாதன். இருவரும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறையில் உயர் பதவியில் உள்ளனர்.
எழுத்து, பாடல், இசை அமைப்பு:
ஸ்கிரிப்ட்டில் உதவி வி. கிருஷ்ணமூர்த்தி, கே. பத்மாவதி. இதில் வரும் பாடல்களை எழுதியதும், இசை அமைத்ததும், காட்சி அமைத்ததும், பின்னணி வடிவமைப்பை செதுக்கியதும் என A-Z அனைத்தும் காம்கேர் கே. புவனேஸ்வரி. ‘இதுபோன்ற விஷயங்களை எல்லாம் நாங்கள் அனிமேஷன் காலத்திலிருந்தே செய்து வருவதால் எனக்கு இது கடினமாக இல்லை’ என்கிறார். இந்த படத்தை முழுமையாக கொண்டு வருவதில் முழு ஊக்கமாக இருந்து செயல்பட்டவர்கள் இவரது உடன்பிறந்தோர் ஸ்ரீவித்யா ஐயரும், சுவாமிநாதனும் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
ஏஐ ஆராய்ச்சிகள்:
1992 களில் இருந்தே Ai ஆராய்ச்சிகளை செய்து வருகிறேன். 1996 லேயே சாதாரண டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டெஸ்க்டாப்பிலேயே ஒரு யானை நடந்து வருவதைப் போல் அனிமேஷனில் ஸ்கிரீன் சேவர் தயாரித்தோம். 2005 லேயே நம் குரலை குளோன் செய்து நாம் எழுதிய புத்தகங்களை, படித்து ரெகார்டிங் செய்யாமல் நம் குரலிலேயே தானாகவே ரெகார்ட் ஆகும் நுட்பங்களை எல்லாம் கண்டுபிடித்து இந்த சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தினோம். 2005-ல் கூகுள் எல்லாம் பிரபலமாவதற்கு முன்பே திருவாசகம் ஆன்மிக படைப்பை Search வசதிகளை எல்லாம் பொருத்தி கண் பார்வைத் திறன் அற்றவர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிட்டோம். பார்வையற்றவர்கள் ஸ்க்ரைபர்ஸ் உதவியுடன் தேர்வு எழுதாமல், அவர்கள் தாங்களே வாயால் சொல்ல சொல்ல கம்ப்யூட்டர் திரையில் பதில்கள் தானாகவே வெளிப்படுமாறு சாஃப்ட்வேர்கள் எல்லாம் தாயாரித்து வெளியிட்டுள்ளோம். கம்பராமாயணம், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பாடல்கள், கந்தர் சஷ்டி கவசம் என பல்வேறு பல்வேறு அனிமேஷன் படைப்புகளை Ai தொழில்நுட்பத்துடன் இணைத்து 2005 களிலேயே வெளியிட்டுள்ளோம்.
இப்படி உலகமெங்கும் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் Ai தொழில்நுட்பத்தை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்த உழைத்தார்கள். எங்கள் காம்கேர் நிறுவனமும் Ai தொழில்நுட்பத்துக்காக ஆராய்ச்சிகள் பல செய்து உலகுக்கு Ai தொழில்நுட்பத்தை இலகுவாக்கி கொடுத்ததில் பெரும்பங்கு வகிக்கிறோம்.
2024 க்கு பிறகுதான் Ai நம் நாட்டில் பரவலாக பேசுபொருளாகி உள்ளது. மக்கள் அனைவரும் Ai ஐ பயன்படுத்தும் பயனாளர்கள் என்றால், எங்கள் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனமும், உலகமெங்கும் உள்ள எங்களைப் போன்ற ஆராய்ச்சியாளர்களும் Ai தொழில்நுட்பத்துக்கான சாஃப்ட்வேர், டூல்ஸ் போன்றவற்றை கண்டுபிடித்து உருவாக்கி வடிவமைத்துக் கொடுத்தவர்கள் எனலாம்.
தொடர்புக்கு: காம்கேர் கே. புவனேஸ்வரி, WhatsApp: 9884280265








