HV கிருஷ்ண பிரசாத் பார்வையில் காம்கேர் புவனேஸ்வரியின் முழுநீள ஏஐ படம்! (டிசம்பர் 22, 2025)

மேல் படத்தில் இடதுபக்கம் முதலில் இருப்பவர் திரு. ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், திரு. வி. கிருஷ்ணமூர்த்தி, காம்கேர் கே. புவனேஸ்வரி

கீழ் படத்தில் இடது பக்கம் முதலில் இருப்பவர் திரு. கிருஷ்ண பிரசாத், திரு. வி. கிருஷ்ணமூர்த்தி, காம்கேர் கே. புவனேஸ்வரி

HV கிருஷ்ண பிரசாத் பார்வையில் காம்கேர் புவனேஸ்வரியின் முழுநீள ஏஐ படம்
விகே (எ) விக்டரி கிங் – VK Alias Victory King

குரல்கள் முதல் உரல்கள் வரை  [இந்தியன் ஆஸ்கர் ஷார்ப்]

முன்குறிப்பு-  அனைவருமே பகிரவேண்டிய பதிவு,  அதுவும் குறிப்பாக சாதிக்க துடிக்கும் அல்லது சாதித்த பெண்கள் பகிரவேண்டிய பதிவு.

இன்று மிக, மிக முக்கியமான ஒரு VVIP யோடு சந்திப்பு நடந்தது. இந்த VVIP யை சந்திப்பது இரண்டாம் முறை.

இனி ஒருவரால் இதுபோல் ஒரு ரெக்கார்டை உருவாக்க முடியாது என்பதை போல் ஒரு ரெக்கார்டை இந்திய சரித்திரத்தில் உருவாக்கி வைத்திருக்கும் சாதனைகளை செய்திருக்கும் முக்கியமான ஒருசில பெண் தொழில் முனைவோர்கள் [Women Entrepreneurs] களை  பட்டியல் இட்டால்  அதில் முக்கியமான 3 பெண்மணிகள் வருவார்கள்:

1] சுதா மூர்த்தி

சுதா மூர்த்தி அவர்கள் இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் மனைவி என்பது பலருக்கு தெரியும். ஆனால் பலருக்கு தெரியாத ஒரு தகவல். சுதந்திர இந்தியாவின் முதல் பெண் இன்ஜினீயர் சுதா மூர்த்தி தான். 1981 இல் தான் இன்போசிஸ் உருவானது அதற்கு முன்பே டாடா சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கமான Telco கம்பெனியின் Co Founder ராக 1970 திலேயே இருந்தவர் தான் சுதா மூர்த்தி

2]  Kiran Mazumdar-Shaw

இந்தியாவின் முதல் Bio Technology  கம்பெனியான Enzyme Production எனும் நிறுவனத்தை பெங்களூரில் 1978 இல் உருவாக்கியதே இந்த பெண்மணி தான்

3]  Compcare புவனேஸ்வரி

1992 இல் இவுங்க உருவாக்கிய Compcare எனும் நிறுவனம் தான் இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் ஒரு பெண்மணி தனியாக  துவங்கிய முதல் Software நிறுவனம்.

புவனேஸ்வரி அவர்கள் ஒரு மிகப்பெரிய சாதனையை, World Record டை செய்து இருக்கிறார்கள்.

இந்த பதிவை செய்வதற்கு முன் Chat GPT, Groke, Perplexity போல் பல்வேறு AI ஆப்களில் சரி பார்த்த பின்னர் தான்  இந்த பதிவை உறுதியாக செய்கிறேன்.

உலகின் முதல் AI Biography தனது தந்தை கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கையை வைத்து புவனேஸ்வரி  உருவாக்கி இருக்கிறார். இந்த சாதனையை புவனேஸ்வரி அவர்களுக்கு முன் யாருமே இதுவரை செய்ததில்லை.

அனிமேஷன் மற்றும் AI இரண்டிற்கும் சில ஒற்றுமைகள் உண்டு.  ஆனால் AI முற்றிலும் வேறுவிதமான கோணம், வேறுவிதமான பரிமாணம். அது இந்த துறையில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். இதுவரை உலகம் முழுவதும் நிறைய அனிமேஷன் படங்கள், டாகுமெண்ட்ரிகள் லாம் வந்துள்ளது. ஆனால் முழுக்க, முழுக்க AI வைத்தே நடத்தப்பட்ட சாதனை உலக அளவில் இரண்டு தான்

ஒன்று லண்டனில் இன்னொன்று நம் இந்தியாவில்

2016 ஆஸ்கர் ஷார்ப் [Oscar Sharp] அவர்கள் AI மூலம் Benjamin எனும் ஒரு AI எழுத்தாளரை உருவாக்கி அந்த AI எழுத்தாளர் Benjamin  திரைக்கதையை வைத்து Sunspring எனும் ஒரு படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்தார். Sunspring AI Movie என்று Youtube பில் போட்டு பாருங்கள்.

2016 க்கு பின் இரண்டாவதாக 100 சதவீதம் AI யில் வந்த திரைப்படம் அதுவும் உலகின் முதல் AI டாகுமெண்டரி படம். [VK Alias Victory King)

இதற்கான இசை முதல் சகலமும் புவனேஸ்வரி அவர்களின் கைவண்ணத்தில் இல்லை, இல்லை மூளைவண்ணத்தில் உருவானது என்பது  இந்தியர்களான நமக்கு எவ்ளவு பெருமையான ஒரு விஷயம்.

புவனேஸ்வரி அவர்களின் தந்தை கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களது வாழ்க்கை வரலாற்றில் அவரின் திருமணம்  சம்பந்தப்பட்ட அந்த பகுதிக்கு  மட்டும் இன்று என் தந்தை ஹரிகேசநல்லூர் வெங்கட் ராமன் அவர்கள் பைட் கொடுத்தார்.

இந்த திருமணமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களின் சொந்த ஊரில் உள்ள வீட்டில் நடந்த திருமணம். அப்ப இந்த போட்டோகிராபி, வீடியோ கிராபி லாம் எடுக்கப்படவில்லை. ஆனாலும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல உறவினர்களின் சின்ன சைஸ் கருப்பு, வெள்ளை படங்கள் மற்றும் புகைப்படம் இல்லாத சில உறவினர்களின் அடையாளங்களை, அந்த உறவினர்களை நன்கு பார்த்த சக உறவினர்கள், நண்பர்கள் சொன்னதை வைத்து  தத்ரூபமாக அந்த உருவங்களுக்கு உயிர் கொடுத்து, இது Artificial அல்லது கார்ட்டூன் என்பது தெரியாத மாதிரி  தத்ரூபமாக நிஜ கல்யாண வீடியோ கவரேஜ் போல் உருவாக்கி, 50 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த அந்த வீடு, அன்று திருமணத்துக்கு வந்து வாழ்த்திய உறவினர்கள், நண்பர்கள் சம்பந்தப்பட்டவர்களின் அந்த குரல்கள் முதல் அன்று நம் வீட்டில் இருந்த உரல்கள் வரை  என குரல்கள் முதல் உரல்கள் வரை அனைவரையும், அனைத்தையும்   அப்படியே AI மூலம்  கண் முன்னே கொண்டு வந்து புவனேஸ்வரி அவர்கள் நிறுத்தி இருக்கிறார்.

33 ஆண்டுகளுக்கும் மேலாக Software துறையில் முக்கியமான இடத்தில்  புவனேஸ்வரி அவர்கள் இருப்பது ஒரு சாதனை என்றால் இன்னொருபுறம்   கணினி அறிவு, தகவல் தொழில்நுட்பம் குறித்து 250 க்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி, உலகின் பல்வேறு மேடைகளில் தகவல் தொழில்நுட்பம் குறித்து பேசி, இவை அனைத்தையும் தாண்டி எளிய தமிழ் மூலம் பல ஊரக, கிராமப்புற இளைஞர்கள், இளைஞிகளுக்கு  தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பல  விஷயங்களை கற்றுக்கொடுத்து அதன்மூலம் இந்த துறையில் சாதிப்பதற்கு பலரை ஊக்கப்படுத்தும் ஒரு ஊந்து சக்தியாக திரு புவனேஸ்வரி அவர்கள் விளங்குகிறார்.

இத்தனை விஷயங்களையும் மொத்தமாக செய்யும் ஒரு தொழில் முனைவோராக இவர் இருப்பது என்பது இவருக்கான  தனித்த ஒரு அடையாளம் என்று தான் நினைக்கிறேன்.

காந்தாரா பட இசை அமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் அவர்கள் நமது அலுவலகத்துக்கு வந்தது குறித்து ஏற்கனவே பதிவு செய்திருந்தேன்.

திரு அஜனீஷ், புவனேஸ்வரி அவர்கள் போன்ற நல்ல சிந்தனை கொண்ட பல சாதனையாளர்களை தொடர்ந்து சந்திப்பதும், இதுபோன்றவர்கள் நமது ஸ்ரீ யோக வராஹா டிரேடர்சில் சக்திவாய்ந்த சில ஆன்மீக பொருட்களை வாங்கி என்னை வாழ்த்துவதும்  எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

இதையும் தாண்டிய ஒரு பெரும் பாக்கியம் என்றால் அது  பல எளிய, கடைநிலை மனிதர்கள் நமது வழிகாட்டுதல் மூலம் பல்வேறு பிரச்னைகளில் இருந்து  விடுதலை பெறுதல்.

பல எளிய மனிதர்களுக்கு இதுபோன்ற ஆன்மீக பொருட்களின் பலன்கள் போய்சேரவேண்டும் எனும் ஒரே காரணத்தால் தான் சாதாரண ரோடு சைடு கடைகளில் உள்ள விலைக்கு உயர்தரமான ஆன்மீக பொருட்களை தருகிறேன். என் அப்பா ஹரிகேசநல்லூரின் பெயருக்கு ஒரு பெரிய Brand இருக்கு. என் பெயருக்கும் ஒரு சிறிய Brand உருவாகி விட்டது. ஆனாலும் இதைலாம் காரணம்  காட்டி விலையை அதிகரிக்காமல், சம்பந்தப்பட்ட ஆன்மீக பொருட்களுக்கான GST யை கூட கஸ்டமர்களிடம் வாங்காமல்  அந்த கஸ்டமர்களின் GST யையும் நான் கட்டி, குறைவான விலைக்கும் கொடுத்து, முக்கியமாக சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு உரிய பூஜையையும் சரியாய் செய்து கொடுத்து என இவ்ளவு விஷயங்களையும்  செய்வதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. என் தந்தையின் வாழ்க்கை பாதை வேறு, எனது வாழ்க்கை பாதை வேறு.

எல்லா புகழும் ஸ்ரீ யோக வராஹருக்கே.

அந்த வராஹ பெருமானின் அனுக்ரஹத்தால் புவனேஸ்வரி அவர்கள் மேலும் பல சாதனைகளை புரியட்டும்.

இப்படிக்கு

HV கிருஷ்ண பிரசாத்

(Visited 7,885 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon