#கதை: கலைமகளில்… வேரை விரும்பாத விழுதுகள்… (ஜூன் 1989)

கலைமகளில் ‘வேரை விரும்பாத விழுதுகள்…’

சரஸ்வதி பூஜை, விஜயதசமி முடிந்து பல்கலைக்கழக புது பிராஜெக்ட் ஒன்றுக்கும் சேர்த்து பூஜை போட்டு சிறிது கேப் கிடைக்க, என்னவோ திடீரென மனதுக்குள் ஒரு ஸ்பார்க் தோன்ற கல்லூரி காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் நான் எழுதிய  100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகளில்  தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்து புத்தகமாக்கும் முயற்சியில் இன்று லே அவுட் ஆன கதை ‘வேரை விரும்பாத விழுதுகள்…’.

இந்தக் கதை 1989 ஆம் ஆண்டு கலைமகளில் வெளியானது.

1989 – ல் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு திருச்சியில் ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்.

எல்லா படைப்புகளும் அந்தந்த காலகட்டதின் கண்ணாடியாக இருக்கின்றன என்பதை அந்த கதையை படித்தபோது உணர முடிந்தது.

அந்த ஸ்கேன் காப்பியில் என் பெயரையும், B.Sc படித்துக்கொண்டிருந்ததால் அடைப்புக்குறிக்குள் (B.Sc.,) எனவும் போட்டு  திருச்சி முகவரியையும் சீல் வைத்திருப்பேன். (பார்க்கவும்)

இதுப்போல எனக்கும் என் சகோத சகோதரிக்கும் எங்கள் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்ப வசதியாக முகவரியுடன் ரப்பர் ஸ்டாம்ப் செய்துகொடுத்து ஊக்கப்படுத்திய என் பெற்றோரின் செயல்பாட்டை இன்று நினைக்கும் போதும் கண்களில் கண்ணீர் பெருகுகிறது.

இதே அக்கறையைத்தான் தொடக்கத்தில் இருந்து இன்று வரை எங்கள் மீது காண்பித்து வருகிறார்கள் என் பெற்றோர்.

அன்று என் படைப்புகளை அனுப்ப ரப்பர் ஸ்டாம்ப் செய்து கொடுத்து என் பெற்றோர் ஊக்கப்படுத்தியதால்தான் (இதுபோல குட்டி குட்டியாய் எத்தனை ஊக்கப்படுத்தல்கள்… பட்டியல் போட பக்கங்கள் போதாது) இன்று காம்கேர் என்ற நிறுவனத்தையே உருவாக்க முடிந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

பெற்றோரின் சின்ன சின்ன செயல்பாடுகளும் பிற்காலத்தில் மிகப் பெரிய புரட்சிக்கே வித்திடும் என்பது என் விஷயத்தில் நிரூபணம் ஆன உண்மை.

எனவே பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் திறமையை போற்றுங்கள்… நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு அவர்கள் உயர்ந்து உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

1989-ம் ஆண்டு என் படைப்பை அங்கீகரித்து பிரசுரம் செய்த கலைமகள் பத்திரிகைக்கு நன்றி.

அந்த படைப்பு உங்கள் பார்வைக்கு. நேரம் இருப்பவர்கள் படித்துப் பார்க்கலாம்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
அக்டோபர் 28, 2018

ஜூன் 1989 ம் ஆண்டு கலைமகள் இதழில்
‘வேரை விரும்பாத விழுதுகள்’
என்ற தலைப்பில் வெளியான கதை

 

(Visited 1,063 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon