இன்று தேசிய இளைஞர் தினம் – சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்.
2013-ம் ஆண்டு விவேனாகந்தரின் 150-வது பிறந்த நாளை ஒட்டி தினமணியில் பணிபுரிந்து வரும் உயர்திரு. முரளி முத்துவேலு அவர்கள் www.vivekanantham150.com என்ற வெப்சைட்டை வடிவமைத்து அதில் அந்த வருடம் முழுவதும் விவேகானந்தர் குறித்து தினம் ஒரு பதிவாக வெளியிட்டு வந்தார். பல தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலதரப்பட்டவர்களிடம் இருந்து கட்டுரைகள் எழுதி வாங்கி வெளியிட்டார்.
நானும் அதில் எழுதி வந்தேன். அந்த அனுபவம் முற்றிலும் வித்தியாசமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்தது.
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை ஓரளவுக்கு நான் அறிந்திருந்தாலும் அவரைப் பற்றி முழுவதும் அலசி ஆராய்ந்து தெரிந்துகொள்ள அந்த அனுபவம் உதவியது.
நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ – இந்தப் புத்தகம் நியூ சென்சுரி புக் ஹவுஸ் (NCBH) வாயிலாக வெளியானது.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று இந்த இனிய நினைவுகளுடன்…
இந்தப் புத்தகத்தின் சிறப்பு:
இந்த கட்டுரைகளை, என் வாழ்க்கை அனுபங்களை சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை அனுபவங்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளேன்.
ஸ்ரீராமகிருஷ்ண மடம் சுவாமி விமூர்த்தானந்தா அவர்கள் இந்தப் புத்தகத்துக்கு மதிப்புரை / வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
ஜனவரி 12, 2019