ஜனவரி 21, 2019 அன்று வின் டிவியில் என்னுடைய நேர்காணல் ஒளிபரப்பானதை ஃபேஸ்புக், டிவிட்டர் முதலான சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தேன்.
டிவியில் பார்க்க முடியாதவர்களுக்காக யு-டியூப் லிங்கையும் கொடுத்திருந்தேன்.
வீடியோவை பார்த்துவிட்டு நேற்று… மீடியாதுறையில் மிகமிக நேர்மையாக தங்கள் பணியிலும் வாழ்க்கையிலும் சிறப்பாக வாழ்ந்துவரும் திரு. சேது நாகராஜன் மற்றும் திரு. முருகராஜ் இருவரும் எனக்கு தங்கள் வாழ்த்தினை பதிவு செய்திருந்தார்கள்.
இருவருமே கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பரஸ்பரம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னுடன் நல்ல தொடர்பில் இருப்பவர்கள் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இருவருமே ஒத்த கருத்தை பதிவு செய்ததுதான் ஆச்சர்யம்.
//அம்மா, அப்பா, ஆசி, உண்மை, உழைப்பு இவைதான் காம்கேர் புவனேஸ்வரி அவர்களின் உழைப்பு// என திரு. சேது அவர்களும்,
//உங்கள் பேட்டி மேஜையில் நீங்கள் எழுதிய புத்தகங்களுக்கு மத்தியில் பாரதியை வைத்திருந்த விதமே ஜோர். எந்த இடத்திலும் பெற்றோரை உயர்த்திப்பிடிக்கும் உங்கள் பாங்கும் பண்பும் பிரமாதம்,விருப்பமான தொழிலை விருப்பமான முறையில் செய்தால் யாரும் ஜெயிக்கலாம் என்று முத்தாய்ப்பாக சொன்ன விதம் அருமை வாழ்த்துக்கள். இத்துனை புகழும் சாதாரணமாக வந்துவிடவில்லை கடுமையான உழைப்பு மற்றும் அதிகாலை விழிப்பும் முக்கிய காரணம் என்பதை பேட்டியை பார்த்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றே கருதுகிறேன் மொத்தத்தில் பேட்டி நன்றாக இருந்தது,வாழ்த்துக்கள்…// என திரு. முருகராஜ் அவர்களும்…
தங்கள் வாழ்த்தை அனுப்பி இருந்தார்கள்.
நம் சுயத்தையே மற்றவர்களும் உணரும்போது மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? அப்படிப்பட்ட எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன் நேற்று.
(ஒளிபரப்பான அன்றே ‘சுடச்சுட’ ஆத்மார்த்தமாக தங்கள் கருத்தை பதிவிட்ட உயர்திரு. கமலா சுந்தரம் வைத்தீஸ்வரன் மற்றும் BSNL –ல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உயர்திரு. ராம்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் Like செய்து ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.)
அன்புடன்
காம்கேர் புவனேஸ்வரி
ஜனவரி 29, 2019