‘பேரன்பு’ – ‘வாழ்க்கையில் நாம் எத்தனைக் கொடுத்து வைத்தவர்கள்’ என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வைக்கிற திரைப்படம்.
வாழ்க்கையும் இயற்கையும்…
- வெறுப்பானது
- அதிசயத்தக்கது
- கொடூரமானது
- அற்புதமானது
- புதிரானது
- ஆபத்தானது
- சுதந்திரமானது
- இரக்கமற்றது
- தாகமானது
- விதிகளற்றது
- முடிவற்றது
- பேரன்பானது
என 12 அத்தியாயங்கள்.
மூளைமுடக்குவாத நோயில் மகள், பிரிந்து சென்ற மனைவி, இயற்கை சூழலில் தனிமையான வீட்டில் மகளுடன் வாழ்க்கை, துரத்தும் வாழ்க்கை துயரங்கள் இத்தனையையும் போராடி ஜெயித்துக்கொண்டே வரும் கதாநாயகன், மகள் வளர வளர பிரச்சனைகளும் வெவ்வேறு ரூபத்தில் வளர, அவற்றைத் தாங்க முடியாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவெடுக்கும் தருணத்தில் திருநங்கை ஒருவரின் நட்பு கிடைக்க இறுதியில் என்ன நடக்கிறது என்பதை திரைப்படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்களேன்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் மம்முட்டியின் குரலில் கதை முன்னுரை சொல்லி ஆரம்பித்து காட்சியாக விரிகிறது… மம்முட்டி + சாதனா இருவரின் நடிப்பில் கேமிராவும், இசையும் இணைந்து திறமையான கூட்டணியில் இயக்குனர் ராம் அழகிய நாவல் போன்ற நெடுங்கதையை கவிதையாக்கிக் கொடுத்திருக்கிறார்.
பேரன்பின் ஒட்டு மொத்த டீமுக்கும் வாழ்த்துகள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
பிப்ரவரி 4, 2019
குறிப்பு: முகநூலில் பேரன்பு திரைப்படம் குறித்து நான் எழுதிய விமர்சனத்துக்குப் பிறகு நிறையபேர் என்னிடம் ‘நீங்கள் அந்தப் படத்தைப் பற்றி உணர்வுப் பூர்வமாக எழுதவில்லை…’ என்றார்கள். அதனால் மிக விரிவான விமர்சனம் இந்த லிங்கில்…http://compcarebhuvaneswari.com/?p=3630