பல்கலைக்கழகங்களில் காம்கேர் தயாரிப்புகள்

சென்னை பல்கலைக்கழகம்…

அண்ணா பல்கலைக்கழகம்…

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்…

மைசூர் பல்கலைக்கழகம்…

கடந்த 25 வருடங்களில் இந்தப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல கல்லூரிகளில் பாடதிட்டமாகவும், சமூக  செயல்பாடுகளுக்கு உதவும் நிகழ்ச்சிகளுக்கான பாடதிட்டமாகவும்…

நான் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்களும்…

எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள  சாஃப்ட்வேர் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்-அனிமேஷன்-இ.கன்டன்ட்-ஆடியோ வீடியோ படைப்புகள்  இடம்பெற்று வருவதைத் தொடர்ந்து…

இந்த வருடத்தில் (2019) மேலும் சில பல்கலைக்கழகங்கள் சார்ந்த கல்லூரிகளில் எனது தயாரிப்புகள் பாடத்திட்டமாக வைக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சென்ற வாரம் தொலைபேசியில் கிடைத்த இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவுடன் எந்தெந்த கல்லூரி, என்னென்ன தயாரிப்புகள் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம்பெற இருக்கின்றன என்பதை தெரிவிக்கிறேன்.

எங்கள் காம்கேரின் பணி குறித்து சுருக்கமாக… (இதுவரை அறியாதவர்களுக்காக!)

எங்கள் காம்கேரின் முதன்மைப் பணி சாஃப்ட்வேர் தயாரிப்பு என்றாலும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்பம் சார்ந்த அத்தனை விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும் பிரபலமாகாத 1992-களில்  சாதி, மதம் இன, மொழி வேறுபாடின்றி எங்கெல்லாம் தொழில்நுட்பத் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்த்தோம். இப்போதும் தொடர்கிறோம்.

எங்கள் காம்கேர் மூலம் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர், அனிமேஷன், APP, ஆவணப்படங்கள் இவற்றின் மூலம் நான் பெறுகின்ற அனுபவங்களை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தந்த காலகட்டங்களிலேயே ஒரு நிர்வாகியாக மட்டும் இல்லாமல் படைப்பாளியாகவும் தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்கள் எழுதி வெளியிட ஆரம்பித்தேன்.

புத்தகங்கள்தான் என் உழைப்பின் விசிட்டிங் கார்டாக அமைந்திருந்தன என்றே சொல்ல வேண்டும். தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் காம்கேரின் உழைப்பின் பலன் சென்றடைய  உதவிய  கோடானு கோடி  வாசகர்களுக்கும் ஸ்பெஷல்  நன்றிகள்.

இந்த நெடிய பயணத்தில் எனக்கு அறிமுகம் ஆன பத்திரிகை, பதிப்பகம், வானொலி, தொலைக்காட்சி, இணையம் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து மீடியாக்களும் என் திறமைக்கு மகுடம் சூட்டி என்னை இந்த சமுதாயத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருந்த காலகட்டத்தில் என் பெற்றோரையும் விட்டுவைக்காமல் அவர்களையும் சிறப்பித்த மீடியாக்களுக்கும் நன்றி.

சந்திப்போம்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited

பிப்ரவரி 5, 2019

(Visited 39 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon