‘கோடு’ ஓவியக்கூடம்!

‘கோடு’ ஓவியக்கூடம்!

ஓவியத்துக்கு மிக நெருக்கமான பெயர். வேளச்சேரி 100 அடி ரோடில் அண்மையில் திறந்துள்ளார் திரு. சீராளன் ஜெயந்தன்.

இன்று இந்த ஓவியப் பள்ளிக்கு நேரில் சென்றிருந்தேன்.  பல்வேறு ஓவியர்களின் கைவண்ணத்தில் ஓவியங்களை காட்சிப்படுத்திய கண்காட்சியுடன் தொடங்கியுள்ளார்.

ஓவியக்கூடம் கலைநயத்துடன் பல்வேறு வண்ணக்கலவைகளால் சரஸ்வதி கடாக்ஷத்துடன் காட்சியளிக்கிறது.

பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் பழகுவதற்கும் எளிமையான மனிதராக இருக்கிறார்.

இவரைப் பற்றி இவரிடமே கேட்டறிந்தேன். தன்னடக்கத்துடன் மிக அமைதியாக தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

இவர் தமிழக ஆளுநரின் உதவியாளராக இருந்தவர். எழுத்தாளர், ஓவியர், கவிஞர்  என பன்முகம் கொண்டவர்.   இவரது சொந்த ஊர் திருச்சிக்கருகே உள்ளே மணப்பாறை.

இவரது தந்தை எழுத்தாளர் ஜெயந்தன் அவர்கள் ‘கோடு’ என்ற பெயரில் இலக்கியம் சார்ந்த சிறுபத்திரிகை நடத்தி வந்துள்ளார். ஒன்பது வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்த பிறகு அந்தப் பத்திரிகை தொடரவில்லை.

அவர் இருக்கும்போதே மணப்பாறையில் அவரது நண்பர்கள் செந்தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் சிறுவர்களுக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்துவைக்கும் பணியை செய்துவந்துள்ளனர்.

தந்தை இறந்தவுடன் அந்த அறக்கட்டளையுடன் இணைந்து எழுத்தாளர்களுக்கு ஜெயந்தன் இலக்கிய விருதுகளை வழக்கி எழுத்தாளர்களை ஊக்குவித்து வருகிறார்.

மேலும் ‘கோடு’ ஓவியக்கூடத்தில் ஓவியப் பயிற்சியும், கருத்தரங்குகளும், கண்காட்சிகளும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

கண்காட்சியில் இடம்பெற்ற பெண்ணியம் குறித்து இவர் வரைந்துள்ள காம்போசிஷன் ஓவியங்கள் பிரமிப்பாக இருந்தது.

இவர் அப்பாவைப் பற்றிச் சொல்லிய தருணமே ஓர் உயிரோவியம்.

அப்பாவின் மீது அலாதிபிரியமும், அளவுக்கடந்த பாசமும், மரியாதையும் வைத்துள்ளார்.

அப்பாவைப் பற்றி கூறுகையில் நெகிழ்ந்தார். இவரது அப்பா இறந்தபிறகு அடுத்த  ஒரு வருடம் மனதளவில் நொறுங்கிப் போனதாகவும், எழுத்து, ஓவியம் என எதையுமே செய்ய முடியாமல் தவித்ததாகவும், அதன்பிறகே அப்பா பெயரில் விருதுகள் கொடுக்க முடிவெடுத்ததாகவும் கூறினார்.

இவர் அப்பாவின் ஆசியுடன்…

ஓவியக்கலைக்கூடம் களைக்கட்டட்டும்
முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டட்டும்!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 29, 2019

(Visited 158 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon