பதிப்பாளராகவும் எழுத்தாளராகவும் எழுதி வெளியிட்ட புத்தகங்கள்
1992 முதல் இன்று வரை
150-க்கும் மேற்பட்டவை
To view the books: https://compcarebhuvaneswari.com/?p=10483
கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்கவே யோசித்துக்கொண்டிருந்த 1992-ல் என் படிப்பு, திறமை உழைப்பு மூன்றையும் அடித்தளமாக்கி ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனத்தைத் தொடங்கினேன்.
சாஃப்ட்வேர் தயாரிக்கும் பணியை முதன்மைப் பணியாகக்கொண்டு செயல்படத் தொடங்கிய நிறுவனத்தின் வாயிலாக எனக்குக் கிடைத்த அனுபவங்கள் அத்தனையையும் எழுத்து, புத்தகம், பேச்சு, அனிமேஷன், ஆவணப்படங்கள், பயிற்சி என எல்லா கோணங்களிலும் தொழில்நுட்பத்தை தமிழகமெங்கும் எடுத்துச் சென்றதில் பெரும்பங்கேற்றுள்ளேன்.
என் எழுத்தின் அடையாளம்
எனது புத்தகங்களில் என் எழுத்து மிக விரிவாகவும் ஆழமாகவும் தெளிவாகவும் ஆய்வு நூலுக்கான தரத்துடன் வெளிப்பட்டிருக்கும். மேலும் வடிவமைப்பிலும் முழு கவனம் செலுத்துவேன். எனது புத்தகங்களில் ஒவ்வொரு பக்கத்தையும் விளக்கப்படங்களுடன் விளக்கங்கள் கொடுத்து மல்டிமீடியா புத்தகம் போன்று நேர்த்தியாக வடிவமைத்திருப்பேன்.
உங்கள் முன் உள்ள ஒரு கம்ப்யூட்டருடன், நான் எழுதிய புத்தகத்தை வைத்துக்கொண்டு, நான் வழிகாட்டிய படங்களுடன் கம்ப்யூட்டரில் செய்துபார்த்துக்கொண்டே வரலாம். ஆசிரியர் இல்லாமலேயே எந்த ஒரு சப்ஜெக்ட்டிலும் மாஸ்ட்டராகிவிடலாம். ஏராளமான விளக்கப்படங்களுடன், செயல்முறை வழிகாட்டுதல்களோடு மல்டிமீடியா புத்தகம் போல எழுதுவதே என் எழுத்தின் அடையாளம்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல் புத்தகம்
‘இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஓர் அறிமுகம்’ – இது தமிழில் வெளியான என் முதல் தொழில்நுட்பப் புத்தகம். ‘An Easy Way to Learn C Language’ – என் முதல் ஆங்கிலத் தொழில்நுட்பப் புத்தகம். அப்போது என் வயது 25.
கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களுக்கு மட்டுமில்லாமல் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்தும் ஆய்வு செய்து எழுதி வருகிறேன்.
கம்ப்யூட்டரிலும் மொபைலிலும் தமிழில் கலக்கலாம், ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் – சூரியன் பதிப்பகம் வாயிலாக நான் எழுதி வெளியிட்டுள்ள இந்த இரண்டும் தமிழ் பதிப்பக உலகில் முதன் முதலில் தமிழில் வெளியான மொபைல் தொழில்நுட்பத்துக்கான புத்தகங்கள்.
தொழில்நுட்பம் தவிர்த்து பிற நூல்கள்
மனதை Format செய்யுங்கள், குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட், திறமையை பட்டைத் தீட்டுங்கள், இப்படிக்கு அன்புடன் மனசு, படித்த வேலையா பிடித்த வேலையா என மனித மனங்களை ஆராய்ந்து வாழ்வியல் குறித்து பல்வேறு நூல்களை எழுதி உள்ளேன்.
பல்கலைக்கழகங்களிலும் நூலகங்களிலும் இடம்பெற்றுள்ள நூல்கள்
இப்படியாக தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியலுக்காக நான் எழுதிய 150 க்கும் மேற்பட்ட புத்தகங்களில் பல புத்தகங்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாக உள்ளன. அதுபோல தமிழகத்தில் உள்ள நூலகங்களில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள பலநாடுகளைச் சார்ந்த நூலகங்களிலும் இடம்பெற்றுள்ளன.
2019- ம் ஆண்டு கம்ப்யூட்டரிலும் மொபைலிலும் தமிழில் கலக்கலாம் என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சிக் கல்லூரியான சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பி.ஏ தமிழ் பாடத்திட்டதுக்கு பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே…
சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம் இவற்றில்…
கடந்த 25 வருடங்களில் இந்தப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல கல்லூரிகளில் பாடதிட்டமாகவும், சமூக செயல்பாடுகளுக்கு உதவும் நிகழ்ச்சிகளுக்கான பாடதிட்டமாகவும்,
நான் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்களும்…
எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள சாஃப்ட்வேர் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்-அனிமேஷன்-இ.கன்டன்ட்-ஆடியோ வீடியோ படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
பிறநாடுகளில் இருந்து கிடைத்த பாராட்டுகள்
நான் எழுதிய ‘ஃபோட்டோஷாப்’ புத்தகத்தைப் பாராட்டி அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து கடிதம் வந்தது பெருஞ்சிறப்பு. தவிர ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா, ஸ்ரீலங்கா, மாஸ்கோ போன்ற நாடுகளிலுள்ள நூலகங்களில் என்னுடைய புத்தகங்கள் இடம்பெற்று வாசகர்களுக்கிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளதை அந்தந்த நூலகங்களில் உள்ள நூலகர்களும், வாசகர்களும் பாராட்டி அவ்வப்பொழுது இமெயில் அனுப்புவதில் இருந்து அறிய முடிகிறது.
இ-புத்தகங்கள்
இபுக்ஸ்களை எங்கள் காம்கேர் வெளியீடாக வெளியிட்டு வருகிறோம். அவை அமேசான் கிண்டிலில் கிடைக்கும்.
புத்தகங்களை பார்வையிட…
https://compcarebhuvaneswari.com/?p=10483