வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராக!

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராக!

1992 முதல் இன்று வரை

1000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள்

வானொலி நிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறேன். தினம் ஒரு குறள் என்ற நிகழ்ச்சியை பாண்டிச்சேரி FM – ல் தொடர்ச்சியாக தயாரித்து வழங்கி இருக்கிறேன். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறள் என 1330 திருக்குறளும் இடம் பெற்றன.

குறளை அப்படியே படித்தல், தொடர்ந்து குறளை இனிமையான குரலில் பாடுதல்,  பின் அதன் விளக்கம், இறுதியில் அன்றாட நிகழ்வுகள் மற்றும் பொருத்தமான கதைகளுடன் கூடிய எளிய விளக்கம் என அதிகம் படிக்காத மக்களுக்கும் புரியும் வண்ணம் தயாரித்து வழங்கினேன்.

இதுபோல தினம் ஒரு கதை, தினம் ஒரு பழம், தினம் ஒரு காய்  என  தொடர்ச்சியாக  வருடம் முழுவதும் (365 நாட்கள்) ஒவ்வொரு நாளும்  ஒரு  நிகழ்ச்சி  ஒலிபரப்பாகி வந்தது.

ஆல் இந்தியா ரேடியோவில் ‘கோடை விடுமுறையில் மாணவர்கள் படிக்க வேண்டிய தொழில்நுட்ப கல்வி’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியை வழங்கி இருக்கிறேன்.

பல்வேறு காலகட்டங்களில் என் நேர்காணல்களும் ஒலிபரப்பாகி இருக்கின்றன. அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறேன்.

(Visited 77 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari