அறம் வளர்ப்போம்-13
ஜனவரி 13, 2020
அறிவு – அழிவைத் தடுக்கும், அரணாக அமையும், உண்மையை உணர்த்தும்.
அறிவு நமக்கு அழிவு வராமல் காப்பாற்றும் சிறந்த கருவியாகும்.
தீமைகள் நம்மை அண்டாமல் நமக்கு அரணாக பாதுகாப்புக் கவசமாக இருந்து காக்கக் கூடியது அறிவு.
நன்மை தீமை எது ஆராய்ந்து அறிந்து உண்மையை உணரச் செய்யும் சக்தியைக் கொடுப்பது அறிவு.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-14
ஜனவரி 14, 2020
பாராட்டு – மகிழ்ச்சியைப் பெருக்கவல்லது, ஊக்கமளிக்கும் சக்தி வாய்ந்தது, தவறுகளைக் குறைக்கவல்லது
பாராட்டு என்பது பாராட்டுபவரையும் மகிழ்விக்கும், பாராட்டு பெறுபவரையும் மகிழ்விக்கும்.
எந்த செயலுக்காக பாராட்டு பெறுகிறோமோ அந்த செயலை மேலும் சிறப்பாக செய்யும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கும்.
நாம் செய்கின்ற தவறுகளை குறைத்துக்கொள்ளவும் திருத்திக்கொள்ளவும் சின்ன சின்ன பாராட்டுகள் உதவும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-15
ஜனவரி 15, 2020
பண்டிகைகள் – இறைநம்பிக்கையை விதைக்கிறது, இயற்கையை மதிக்கக் கற்றுக்கொடுக்கிறது, உறவுகளை மேம்படுத்துகிறது
பண்டிகைகள் மனித மனங்களுக்குள் இறைநம்பிக்கையை விதைக்கிறது.
மக்களுக்கு இயற்கை மீதான மதிப்பை அதிகரிக்க உதவுகிறது.
நம் சொந்த பந்தங்களுக்குள் அன்பையும், நட்புகளுக்குள் பாசத்தையும் வளர்க்கும் அற்புத சக்தி வாய்ந்தது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-16
ஜனவரி 16, 2020
பொறாமை – நேர்மறை சிந்தனைகளை அழிக்கும், விரோதத்தை வளர்க்கும், நிரந்தர எதிரி.
பொறாமை குணம் எதிர்மறை சிந்தனைகளுக்கு துணைபோவது. அது ஒருவரது நேர்மறை சிந்தனைகளை அழித்து அவர்களுக்குள் எதிர்மறை சிந்தனைகளை புகுத்திவிடும்.
மனிதர்களுக்குள் அன்பை அழித்து விரோதத்தை வளர்க்கும்.
பொறாமை குணம் நமக்குள் புகுந்துவிட்டால் அதுவே நமக்கு நிரந்தர எதிரி.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-17
ஜனவரி 17, 2020
அறிவு – நல்வழிப்படுத்தும், அழிவைத் தடுக்கும், பாதுகாப்புக் கவசமாக இருக்கும்.
கல்வியாலும் அனுவத்தாலும் நமக்குக் கிடைக்கும் அறிவு நாம் நேர்வழியில் பயணிக்க உதவி செய்யும்.
நம்முடைய அறிவு, நம்மை தீமைகள் நெருங்கினால் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.
நாம் பெற்றிருக்கும் அறிவு, தீமைகளை தடுத்து நன்மைகளைப் பெருக்கி நமக்கு எந்த நேரமும் பாதுகாப்புக்கவசமாக திகழும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-18
ஜனவரி 18, 2020
நேசித்தல் – நம்மை நாம் நேசிப்போம், நம் குடும்பத்தை போற்றுவோம், நாட்டுப் பற்றுடன் வாழ்வோம்.
நேசிப்பது என்பது அழகான ஒரு விஷயம். முதலில் நம்மை நாம் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் நம் குடும்பத்தைப் போற்றும் உத்வேகம் நமக்குள் உண்டாகும்.
நம் குடும்பத்தைப் போற்றும்போதுதான் நம் நாட்டை நேசிக்கும் பண்பு ஊற்றெடுக்கும். நாம் ஒவ்வொருவரும் நாட்டுப் பற்றுடன் வாழ வேண்டியது நம் கடமை.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-19
ஜனவரி 19, 2020
அறியாமை – முட்டாள்தனம் அல்ல, புரிந்துகொள்ளாதிருத்தல், விழிப்புணர்வு இல்லாதிருத்தல்
அறியாமை என்பதை முட்டாள்தனம் என்று நேரடி பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
ஒரு விஷயத்தைப் பற்றிய முழுமையான கண்ணோட்டத்தைப் பெறாமல் இருக்கும்போது அது குறித்த புரிதல் இல்லாமல் போகும். அதுபோல் புரிந்துக்கொள்ளாதிருத்தலை அறியாமை எனலாம்.
போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் அறியாமை என்ற பிரிவிலேயே வரும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai