ஹலோ with காம்கேர் – 51
February 20, 2020
கேள்வி: ஃபேஸ்புக் ஐடி பிளாக் ஆகிவிட்டது. என்ன செய்வது?
என் வெப்சைட்டில் விளக்கப்படங்களுடன் விரிவாக எழுதியுள்ளேன்.
http://compcarebhuvaneswari.com/?p=4015
உங்கள் ஃபேஸ்புக் ஐடிக்குள் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யும்போது உள்ளே செல்லாமல் ‘Your Facebook ID is temporarily blocked’ என்ற தகவல் வந்தால் கவலை வேண்டாம். உங்கள் ஃபேஸ்புக் ஐடி பிளாக் ஆகிவிட்டது என பதற வேண்டாம். உங்கள் ஐடியை மீட்டெடுக்க முடியும்.
ஃபேஸ்புக் ஐடி ஏன் பிளாக் ஆகிறது?
உங்கள் ஃபேஸ்புக் ஐடியை ஃபேஸ்புக் வெப்சைட்டுக்கு யாரேனும் ரிப்போர்ட் செய்திருந்தால் பிளாக் ஆகியிருக்கலாம்.
உங்கள் ஃபேஸ்புக் ஐடியை வேறு யாரேனும் Hack செய்ய முயன்றால் (அதாவது அதற்குள் சென்று அவர்களுடையதாக்கிக்கொள்ள முயற்சிக்கும்போது) பிளாக் ஆகலாம்.
ஃபேஸ்புக் நிறுவனமே உங்கள் ஃபேஸ்புக் ஐடியை சந்தேகத்தின் பேரில் பிளாக் செய்யலாம்.
பிளாக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் ஐடியை எப்படி மீட்டெடுப்பது?
- https://www.facebook.com/ லிங்க் மூலம் உங்கள் ஃபேஸ்புக் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுக்கவும். இப்போது Your account has been temporarily blocked என்ற தகவலுடன் திரை வெளிப்படும். இதில் Continue என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- இப்போது Keep your Account Secure என்ற தலைப்பில் திரை கிடைக்கும். அதில் Continue என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- இப்போது Change your password என்ற தலைப்பில் திரை கிடைக்கும். இதில் New , Retype New என்ற இரண்டு இடங்களிலும் புதிதாக கொடுக்க நினைக்கும் பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். இரண்டிலும் ஒரே பாஸ்வேர்டை கொடுக்க வேண்டும். பிறகு Continue பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது Pages you have liked or Followed என்ற தலைப்பில் நீங்கள் ஏற்கெனவே லைக் செய்துள்ள ஃபேஸ்புக் பக்கங்களின் பெயர்கள் அடங்கிய திரை கிடைக்கும். இதில் SKIP என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- அடுத்ததாக Friends என்ற தலைப்பில் உங்கள் நட்பு வட்டத்தினர்களை உள்ளடக்கிய திரை வெளிப்படும். இதிலும் SKIP என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- நிறைய நண்பர்கள் இருந்தால் இந்தத்திரை நிறைய முறை வெளிப்பட்டுக்கொண்டே வரும். ஒவ்வொரு முறையும் பொறுமையாக Skip பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- இறுதியாக All Finished என்ற தலைப்பில் திரை கிடைக்கும். இதில் Goto News Feed என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்கள் டைம்லைனுக்குள் சென்றுவிடலாம்.
- ஃபேஸ்புக்கில் இருந்து லாக் அவுட் செய்துவிட்டு மீண்டும் நீங்கள் உருவாக்கியுள்ள பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே செல்லுங்கள். உங்கள் நண்பர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பார்கள். அனைவருக்கும் ஹாய் சொல்லிவிட்டு உங்கள் ஃபேஸ்புக் பயணத்தைத் தொடருங்கள்.
குறிப்பு:
ஃபேஸ்புக் ஐடியை மீட்டெடுக்கும்போது டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் இருந்து செய்தால் தடங்கலின்றி விரைவாக செயல்பட முடியும். மொபைலில் இருந்து செய்வதை தவிர்க்கவும்.
அவரவர்கள் ஃபேஸ்புக் ஐடி பிளாக் செய்யப்படிருக்கும் காரணங்களின் அடிப்படையில், மீட்டெடுக்க முயற்சிக்கும் அக்கவுண்ட் உங்களுடையதுதானா என உறுதி செய்துகொள்ள உங்கள் வோட்டர் ஐடி போல ஏதேனும் ஒரு அடையாள எண்ணை கேட்கும். உங்களுக்கு எது விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து டைப் செய்துகொள்ளலாம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
இன்றைய கேள்வியை கேட்டவர்
என் பதிவுகளை தொடர்ந்து படித்துவரும்
உயர்திரு. மதுரை மன்னன்