அறம் வளர்ப்போம்-97
ஏப்ரல் 6, 2020
உயர்வு மனப்பான்மை – தன்னைத்தானே உயர்வாக நினைத்துக்கொள்ளுதல், மற்றவர்களைவிட தான் உயர்வானவன் என்ற மனப்போக்கு, அழிவிற்கு வித்திடும்.
தன்னைத்தானே உயர்வாக நினைத்துக்கொள்ளும் உணர்வுக்கு உயர்வு மனப்பான்மை என்று பெயர்.
தன்னைத்தானே உயர்வாக நினைப்பதுடன் மற்ற எல்லோரையும்விட தான் எல்லா வகையிலும் உயர்வு என்ற மனப்போக்கு ஆபத்தானது.
உயர்வு மனப்பான்மை கர்வத்தையும் பிறரை மதிக்காத குணத்தையும் உண்டாக்கும். இவை அழிவின் விளிப்புக்கே கொண்டு செல்லும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-98
ஏப்ரல் 7, 2020
நயவஞ்சகம் – நம்ப வைத்து ஏமாற்றுதல், சூழ்ச்சி செய்தல், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
நயம்+வஞ்சகம் நயமாக பேசுவதைப் போல் பேசி நம்ப வைத்து ஏமாற்றுவதற்கு நயவஞ்சகம் என்று பெயர்.
ஒருவரை சூழ்ச்சியினால் ஏமாற்றி வஞ்சிப்பது கீழ்த்தரமான செயல்.
நயவஞ்சகமாக ஏமாற்றி வெற்றி பெறுதல் அந்த நேரத்துக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் எதிர்மறை விளைவுகளுக்கே வித்திடும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-99
ஏப்ரல் 8, 2020
குற்றமும் சுற்றமும் – நிறை குறைகள் உள்ளவனே மனிதன், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, சுற்றம் பார்க்கின் குற்றம் இல்லை.
நிறை குறைகளுடன் உள்ளவனே மனிதன். அவரவர்களின் நிறை குறைகளுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்துவிட்டால் வாழ்க்கை இனிக்கும்.
பிறரிடம் உள்ள குற்றங்களையே ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருந்தால் சுற்றத்தினர் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
சுற்றம் வேண்டும் என எண்ணுபவர்கள் அவர்களிடம் உள்ள குற்றங்களை பெரிதுபடுத்த மாட்டார்கள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-100
ஏப்ரல் 9, 2020
புகழ்ச்சி – பாராட்டு, மனதுக்குள் ஏற்றிக்கொள்ளாமல் இருந்தால் சிறப்பு, அளவுக்கு மீறும்போது போதையாகும்.
பாராட்டு என்பது ஒருவரது சிறப்பை அங்கீகாரம் செய்வதற்கு பயன்படுத்தும் யுக்தி. அதை புகழ்ச்சி என்றும் சொல்லலாம்.
பிறரது புகழ்ச்சியை நம் மனதுக்குள் ஏற்றிக்கொள்ளாமல் அதை ஓர் உற்சாக டானிக்போல எடுத்துக்கொண்டுவிட்டால் சிறப்பு.
நம் மீது செலுத்தப்படும் புகழ்ச்சி அளவுக்கு மீறும்போது அதுவே போதையாகிவிடும். நம்மை அழிவுக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு வலிமையானது அதீத புகழ்ச்சி.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai