‘பசுமை விகடன்’ வாழ்த்து

தினகரன் குழும பத்திரிகைகளுக்காக சின்னதும் பெரியதுமாக  ஏராளமான நேர்காணல்களை  செய்து என் பணிகளின் பெருமைகளை வெளிச்சம் போட்டு காண்பிக்க உதவியவர்களுள் திரு. கதிரேசனும் ஒருவர்.

இவர் 2004-ம் ஆண்டு தினகரன் நாளிதழுக்காக என்னை நேர்காணல் செய்து,  ‘30-க்கும் மேற்பட்ட நூல்களை தமிழில்எழுதி சாதனைப் படைத்த காம்கேர் கே.புவனேஸ்வரி’ என சப் டைட்டில் கொடுத்திருந்தார்.

பின்னர் அது ‘சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியானது. அப்போது காம்கேர் ஆரம்பித்து 12 வருடங்கள் ஆகி சாஃப்ட்வேர் தயாரிப்பு, அனிமேஷன் படைப்புகள், புத்தகங்கள் வெளியிடல் என வளர்ந்திருந்தேன்.

2017 -ல் எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி வருடத்தில் விகடன் வாயிலாக என் 100-வது புத்தகம் வெளியான ஏப்ரல் மாதம், அவரை விகடன் அலுவலகத்தில்நேரில் சந்தித்தபோது,  அதே புத்தகத்தின் முதல் பக்கத்தில் என் வளர்ச்சியை கையெழுத்தில் எழுதி  பாராட்டி வாழ்த்தி  எனக்குப் பரிசளித்தார்.

எனது 25 வருட வளர்ச்சியை தன்னுடையப் பார்வையில் மிக அழகாகவும் ரத்தின சுருக்கமாகவும் கவிதை நயத்துடனும் உள்ளார்ந்த அன்புடனும் எழுத்து வடிவில் எனக்குப் பரிசளித்த திரு. கதிரேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

(Visited 324 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon