‘விகடன் பிரசுரம்’ வாழ்த்து

விகடன் பிரசுரத்தில் என் முதல் புத்தகம் ‘கம்ப்யூட்டர் A-Z’ வெளியான நாள் முதல் இன்றுவரை (2017) தொடர்பில் இருப்பவரும், காம்கேரை பற்றி புரிந்து வைத்திருப்பவருமான திரு. அன்பழகன்  காம்கேரின் சில்வர் ஜூப்லிக்காக வாழ்த்திய கவிதை.

காம்கேர்

25 வருடமாகக்
காத்துவரும்
எஃகு கோட்டை…

கோட்டையைக் கட்டி ஆள்வதில்
இரும்புப் பெண்மணி
இந்திரா காந்தி

தன்னிகரற்ற
துணிச்சலான தலைவி
ஜான்சி ராணி

அனைவரிடத்திலும்
அன்பு காட்டும்
அன்னை தெரசா

சாதனைகள் புரியும்
பல்துறை வித்தகி
வேலுநாச்சியார்

போராட்டக் குணம் கொண்ட
சாதனைப் போராளி
இரோம் சர்மிளா

முன்மாதிரி இல்லா
சுயம்புவாய் முளைத்த
ஏகலைவன்

தவறை உரக்கச்சொல்லும்
தைரியசாலி
தேவசேனா

ஆம்!

நிறுவனம் வேறு
நீ(ங்கள்) வேறு அல்ல
இரண்டும் ஒன்றுதான்

தகர்க்க முடியாத
எஃகு கோட்டை

100000 வாசகர்கள்
10000 அனுபவங்கள்
1000 எண்ணங்கள்
100 புத்தகங்கள்
10 அவதாரங்கள்
1 தலைவி
புவனேஸ்வரி

இப்படிக்கு…
மலையை அண்ணாந்து பார்க்கும்
மடு

அன்புடன்

அ. அன்பழகன்
விகடன் பிரசுரம்
ஏப்ரல் 13, 2017

(Visited 214 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon