இறப்புக்குப் பிறகு என்னவாகும் என்ற இன்றையப் பதிவுக்கான வாழ்த்து!
முகநூலில் பதிவுகளை படிப்பார்கள், லைக் செய்வார்கள், கமெண்ட் செய்வார்கள் குறிப்பெப்பது எல்லாம் வேறு லெவல்.
அப்படி இன்று ஆச்சர்யப்பட வைத்தவர் என் பதிவுகளின் தொடர் வாசகரும், என்னுடைய புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்து வருபவருமான திரு ஈஸ்வரமூர்த்தி நடராஜன் அவர்கள். 80 வயதைத் தாண்டிய பெரியவர்.
விடியற்காலையில் நான் பதிவிட்டவுடன் பின்னூட்டமிட்டுவிடும் இவர் இன்று 10 மணி ஆகியும் ஆஜராகவில்லையே என நினைத்துக்கொண்டிருந்தேன்.
இன்றைய பதிவு ‘இறப்புக்குப் பிறகு என்ன நடக்கும்?’ என்ற கான்செப்ட். அது அவரை பாதித்துவிட்டதோ என கவலையாக இருந்தது.
11 மணி அளவில் மிக சுருக்கமாக ‘காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு வாழ்த்துகள்’ என கமெண்ட் செய்தார்.
பின்னர், தான் நீண்ட பின்னூட்டமிட்டதாகவும் அத்தனையும் கைத்தவறி டெலிட் ஆனதால் சுருக்கமாக பின்னூட்டம் செய்ததாக வருத்தப்பட்டு தகவல் கொடுத்திருந்தார்.
அவர் எப்போதுமே என் பதிவுகள் குறித்து ஒரு டயரியில் குறிப்பெடுப்பதாகவும், அந்தக் குறிப்பை வைத்துத்தான் என் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதாகவும் சொல்லி இருக்கிறார். தவறுகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் இந்த முன் எச்சரிக்கை செயல்பாடு என்றும் சொல்லி இருக்கிறார்.
‘நீங்கள் விருப்பப்பட்டால் அதை போட்டோ எடுத்து அனுப்புங்கள்’ என சொல்லி இருந்தேன்.
அவர் போட்டோ எடுத்து அனுப்பியதைத்தான் இங்கு பகிர்ந்துள்ளேன்.
‘தொழில்நுட்பத்துறையில் இயங்கிவரும் ஒரு பெண்ணால் இவ்வளவு சிறிய வயதில் இத்தனை நுணுக்கமாக உளவியல் குறித்து எழுத முடிவதெல்லாம் கடவுளின் அருள். பெற்றோர் வளர்ப்பு’ என்ற வாழ்த்துடன் முடித்திருந்தார்.
அவரது அன்புக்கும் பண்புக்கும் Hats off. வணங்குகிறேன்.
‘இன்று புதிதாய் பிறந்தேன்’ என உயிர்ப்புடன் இயங்க இதைவிட பிரமிக்க வைக்கும் செயல்பாடு வெறெதுவாக இருக்க முடியும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 16 2020