தினம் ஒரு புத்தக வெளியீடு[13]: இ-புத்தகங்களை பரிசளிக்கலாமே!

இனிய மகிழ்ச்சியான விஷயம்! நீங்களும் இதுபோல வித்தியாசமாக, புதுமையாக பரிசளிக்கலாமே!

எங்கள் குடும்ப நண்பர் ஒருவருக்கு சதாபிஷேகம். கொரோனா அச்சத்தினால் சிறிய அளவில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் பிள்ளைகள். எங்களிடமும் அது குறித்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தனர். வித்தியாசமாக புதுமையாக நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்வதில் எங்கள் குடும்பத்தினருக்கும், குடும்ப நண்பர்களுக்கும் நாங்கள் முன்னோடி என்பதால் (அவர்கள் அப்படி நினைப்பதால்) அவர்கள் எங்களிடம் விரிவாக பேசினார்கள்.

பேச்சு விருந்தினர்களுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம் என்ற கோணத்தில் சென்றது. நான் புத்தகம் பரிசளிக்கலாம் என்றேன். புத்தகங்கள் எல்லாம் இந்த காலத்தில் எடுபடுமா என்று சந்தேகமாகக் கேட்டனர்.

நான் அமேசானில் இ-புத்தகங்களை கிஃப்டாக அனுப்பும் வசதி இருப்பதை அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். அவர்கள் கொஞ்சம் உற்சாகமானார்கள்.

அடுத்து என்ன புத்தகம் பரிசளிக்கலாம் என்ற விவாதம். உதாரணத்துக்காக நான் எழுதிய காம்கேரின் OTP வரிசை நூல்கள் (இ-புக்ஸ்) பற்றி சொன்னேன். OTP வரிசை நூல்களில் 15 தலைப்புகள் உள்ளன என்றும், அவற்றின் விலையும் மிகக் குறைவு என்றும் சொன்னேன்.  அதுபோன்ற தன்னம்பிக்கை, வாழ்வியல் நூல்களை (இ-புக்ஸ்) பரிசளிக்கலாம். அவை எல்லா வயதினருக்கும் ஏற்ற நூல்கள் என்றேன்.

பொதுவாகவே நான்  ‘என் நூல்களை பரிசளியுங்கள், வாங்குங்கள்’ என என் குடும்பத்தினரிடமும், குடும்ப நண்பர்களிடமும் எந்த காலத்திலும் சொன்னதே இல்லை. காரணம், என்னைப் பார்த்தாலே என் புத்தகங்களுக்கு மார்கெட்டிங் செய்ய வந்திருக்கிறேன் என நினைத்து ஓட ஆரம்பித்துவிடுவார்கள் என்ற அச்சம்.

அவர்களாக விரும்பிக் கேட்டால் மட்டுமே என் புத்தகங்கள் குறித்துப் பேசுவேன்.

ஆனால் என்ன ஆச்சர்யம், உதாரணத்துக்காக என் நூல்கள் குறித்து சொன்னதுமே ‘எங்களுக்கு அந்த 15 நூல்களையும் (இ-புக்ஸ்) ஒரு காப்பி  எங்களுக்கு அனுப்பி வைக்க முடியுமா? அவற்றில் எந்தெந்த நூல்களை பரிசளிக்கலாம் என நாங்கள் தேர்ந்தெடுத்துச் சொல்கிறோம்’ என்றார்கள்.

அடுத்த அரைமணியில் அவர்கள் இமெயில் முகவரிக்கு காம்கேரின் OTP வரிசை நூல்களை (இ-புக்ஸ்) என் சார்பில் நானே விலைக்கு வாங்கி, சதாபிஷேக தம்பதியினருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தேன்.

இது நடந்து ஒரு வாரம் இருக்கும். இதோ இன்று அவர்கள் காம்கேரின் OTP வரிசை நூல்களில் 5 தலைப்புகளை தேர்ந்தெடுத்து சொல்லி உள்ளார்கள். அவர்கள் குடும்பத்தில் உள்ள 30 இளைஞர்களுக்கு பரிசாக அனுப்புவதற்காக அவர்களின் இமெயில் ஐடி கொடுத்துள்ளார்கள்.  நாங்கள் அமேசானில் 30 பேருக்கு தலா ஐந்து தலைப்பு புத்தகங்களையும் (இ-புக்ஸ்) விலைக்கு வாங்கி அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்ப இருக்கிறோம்.

நாங்கள் அனுப்பும் இ-புக்ஸ் அவர்கள் இமெயில் முகவரிக்கு அமேசான் லிங்காக சென்றுவிடும். அவர்கள் அதை கிண்டில் ஆப்பில் டவுன்லோட் செய்து மொபைல் / லேப்டாப் / டெஸ்க்டாப் / ஐபேட் / டேப்லெட் போன்றவற்றில் படிக்கலாம்.

இதுதான் இ-புத்தகங்களை அன்பளிப்பாக அனுப்பும் லாஜிக்.

மேலும் ஒரு முக்கியமான விஷயம். அமேசானின் நாம் எழுதி வெளியிட்டிருக்கும் இ-புத்தகமாக இருந்தாலும் அதை அன்பளிப்பாக அளிக்க வேண்டும் என்றால் நாம் விலைக்கு வாங்கித்தான் கிஃப்டாக அனுப்ப முடியும்.

முக்கியக் குறிப்பு:

இதுபோல நீங்களும் உங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் இ-புத்தகங்களை பரிசளிக்கலாம். நான் எழுதிய வாழ்வியல் புத்தகங்களை பரிசளிக்க நினைத்தால் இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும்.

எல்லா காலத்துக்கும் எல்லா வயதினருக்கும் ஏற்ற தன்னம்பிக்கை நூல்கள் அவை. மிகக் குறைந்தவிலை நூல்களும்கூட. தினந்தோறும் நான் எழுதிவரும் பதிவுகளின் தொடர் வாசகர்களுக்கு என் எழுத்தின் நோக்கம் புரிந்திருக்கும். அந்தப் பதிவுகளில் இருந்தும் பல கட்டுரைகள் அந்த நூல்களில் இடம் பெற்றிருக்கும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 26, 2021

 ‘காம்கேரின்  OTP  வரிசை சுயமுன்னேற்ற நூல்கள்’!

 1.வாழ்க்கையின் அப்பிடைசர்

ஜம்முனு வாழ வழிகாட்டும் நூல்!
விலை: ரூ.49/-

https://www.amazon.in/dp/B08TV2JJB4

2.வாழ்க்கையின் OTP

தவமாய் வாழ்ந்து வரமாய் குவிக்க வழிகாட்டும் நூல்!
விலை: ரூ.49/-

https://www.amazon.in/dp/B08VWGKKV6

3.வாழ்க்கையின் அப்லோடும், டவுன்லோடும்

சுமக்க வேண்டியதை சுமக்கவும், ஒதுக்க வேண்டியதை ஒதுக்கவும் கற்றுக்கொடுக்கும் நூல்!
விலை: ரூ.75/-

https://www.amazon.in/dp/B08XGLB6X6

4.குழந்தைகள் உலகில் பெற்றோருக்கான பாஸ்வேர்ட்!

குழந்தைகள் விரும்பும் பெற்றோராகத் திகழ கற்றுக்கொடுக்கும் நூல்!
விலை: ரூ.75/-

https://www.amazon.in/dp/B08XN9GGMT

5.எந்தப் பாதையில் உங்கள் பயணம்?

மாணவர்களின் திறமைக்கு பாதைபோடும் நூல்!
விலை: ரூ.75/-

https://www.amazon.in/dp/B08XPMXB91

6.பெண் *Conditions Apply

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட பெண்களைப் பற்றிப் பேசும் நூல்!
விலை: ரூ.49/-

https://www.amazon.in/dp/B073S5M3SQ

7.மாறிவரும் மனோபாவமும், மாற்றத்துக்கான பாஸ்வேர்டும்!

மாறி வரும் மனித சுபாவங்களை அலசும் நூல்!
விலை: ரூ.49/-

https://www.amazon.in/dp/B073SDP55M

8.பாரதப் பெருமிதங்கள்

தேசத்தின் அடையாளம் போற்றும் நூல்!
விலை: ரூ.49/-

https://www.amazon.in/dp/B07426ZMZD

9.பிக் டேட்டா – Big Data

இணையத்தில் பாதுகாப்பாக இருக்கக் கற்றுக்கொடுக்கும் நூல்!
விலை: ரூ.49/-

https://www.amazon.in/dp/B07Z5BKJLM

10.‘கனவு மெய்ப்பட!’

உங்கள் கனவுகளை பலிக்க வைக்கும் அற்புத சக்திவாய்ந்த நூல்!
விலை: ரூ.170/-

வெளியீடு: NCBH குழுமத்தின் தாமரை பதிப்பக வெளியீடு

11.இலக்குகளில் கரையுங்கள்!

இலட்சியக் கனவுகளை நனவாக்கும் நூல்!
விலை: ரூ.49/-

https://www.amazon.in/dp/B08Y761KZ8

12.மனிதனாய் வாழ்வதற்கான ஃபார்முலா!

வாசகர்களின் கேள்விகளுக்கு என் பதில்கள்
விலை: ரூ.75/-

https://www.amazon.in/dp/B08Y82RY7L

13.கொரோனா லாக்டவுனில் முதல் மூன்று மாதங்கள்!

வாசகர்களின் கேள்விகளுக்கு என் பதில்கள்
விலை: ரூ.120/-

https://www.amazon.in/dp/B08Y99BHFD

14.வல்லமை தாராயோ!

வாசகர்களின் கேள்விகளுக்கு என் பதில்கள்
விலை: ரூ.75/-

https://www.amazon.in/dp/B08YFNB4F5

15.சொல்லப் பழகுவோம், சொல்லிப் பழகுவோம், சொல்லித்தர பழகுவோம்!

இளைய தலைமுறையினரை அணுகும் முறை
விலை: ரூ.50/-

https://www.amazon.in/dp/B099ZDVQND

#Daily_a_Book_Release_Virtual_Event
#காம்கேர்_புத்தகம் #COMPCARE_BOOK

(Visited 55 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon