அன்பான வேண்டுகோள்!
அனுமதி பெறாத காப்பி பேஸ்ட் நோய்க்கான மருந்து!
ஃபேஸ்புக்கில் தினமும் காலை 6 மணிக்கு நான் பதிவிடும் வாழ்வியல் கட்டுரைகள், கதைகள், கவிதைகள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் அனைத்தும் என் சொந்த படைப்புகள். அவை என் உழைப்பு.
ஒருவரை ரோல்மாடலாக கொள்ளலாம். ஆனால் ‘அந்த ஒருவரே நான் தான்’ என சொல்வதுதான் தவறு என்கிறேன்.
எனக்கான நேரத்தை ஒதுக்கி, எழுத்தில் செதுக்கி உங்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம் கொடுத்து வருகிறேன்.
அவை
படித்ததில் பிடித்ததோ,
பார்த்ததில் ரசித்ததோ அல்லது
கேட்டதில் மகிழ்ந்ததோ அல்ல!
இவற்றை எடுத்துப் பயன்படுத்தும் பத்திரிகை, தொலைக்காட்சி மீடியாக்களும், மேடைப் பேச்சாளர்களும் என்னிடம் அனுமதி பெற்றே பயன்படுத்துகிறார்கள்.
ஒருசில திரைப்பட இயக்குனர்கள் கூட என் அனுமதி பெற்று சில கான்செப்ட்டுகளை கேட்டு பயன்படுத்தி உள்ளார்கள். என் பெயரையும் எங்கள் நிறுவனப் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தே பயன்படுத்துகிறார்கள்.
எனவே, என்னுடைய பதிவுகளை படித்ததில் பிடித்தது என குறிப்பிட்டோ அல்லது தாங்களே எழுதியதைப் போலவோ எடுத்து காப்பி பேஸ்ட் செய்து தங்கள் பெயரை போட்டு பதிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
பிறரின் கதை / கட்டுரை / கவிதைகளில் கான்செப்ட்டுகளை எடுத்து அப்படியே மறு ஆக்கம் செய்வதும் தவறே.
சொந்தமாக இரண்டு வரி எழுதிப் பகிருங்கள். பிறகு காப்பி பேஸ்ட் செய்து பகிர்வதை நீங்களே நிறுத்திவிடுவீர்கள்.
கற்பனையில் சும்மாவாவது இரண்டு கோடு இழுத்து கலர் கொடுத்துப் பாருங்கள். மார்டன் ஆர்ட் போல இருக்கும். அதன் பிறகு மற்றவர்கள் ஓவியங்களை அவர் பெயரை மறைத்தோ அல்லது வெட்டியோ அவரது உரிமம் பெறாமல் பயன்படுத்த மாட்டீர்கள்.
என் பதிவுகளில் நான் பயன்படுத்தும் ஓவியங்கள், படங்கள், புகைப்படங்கள், அனிமேஷன்கள் எல்லாமே 99 சதவிகிதம் நானோ அல்லது எங்கள் நிறுவனமோ தயாரித்ததாகவே இருக்கும். இதற்கெல்லாம் எத்தனை மெனக்கெட வேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
மீதமுள்ள ஒரு சதவிகிதத்தில் கூகுளில் இருந்து தேடி எடுத்தவையாக இருந்தால் அது காப்பிரைட் உரிமம் கொடுக்கப்பட்டவையாகவே இருக்கும்.
நீங்களே எழுதிப் பழகுங்கள், வரைந்து முயலுங்கள், பேசிப் பாருங்கள். அதுதான் உண்மையான நிஜமான உங்கள் திறமை. அப்புறம் என்ன, உங்கள் திறமைக்கு முன் மற்றவை உயர்வாகவே தெரியாது. அது ஒன்றுதான் மற்றவர்கள் படைப்பை காப்பி பேஸ்ட் செய்து தங்கள் பெயரில் பகிரும் மனப்பாங்கில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி.
வாழ்த்துகள். நன்றி
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 29, 2021