பதிவு எண் 996 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP-265: தீர்வுகள்!

பதிவு எண்: 996 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 265
செப்டம்பர் 22, 2021 | காலை: 6 மணி

தீர்வுகள்!

ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது, அதை நேரடியாக அணுகி அதனுள் சென்று நேரடியாக தீர்த்துக்கொள்வதும் தெளிவு பெறுவதும் ஒரு வகை.

பிரச்சனையை திசை திருப்பி வெளியில் இருந்து அந்தப் பிரச்சனையை அணுகி வேறுவிதமாக அதைக் கையாண்டு தீர்வு காண்பது மற்றொரு வகை. இதை மடைமாற்று முறை எனலாம்.

முன்னதைவிட பின்னதில் தீர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம்.

காரணம்…

நேரடியாக அணுகும்போது பிரச்சனைக்கான காரணகர்த்தாவும், பிரச்சனையினால் பாதிக்கப்பட்டோரும் தீவிர உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருப்பார்கள். தீர்வு கிடைப்பதற்கு தாமதமாகலம் அல்லது தீர்வே கிடைக்காமலும் போகலாம்.

இரண்டாவதாகச் சொன்ன மடைமாற்று முறையில் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு முக்கியத்துவம் இருக்காது. மதிநுட்பம் மட்டுமே மேலோங்கி இருக்கும். தீர்வு ஏதேனும் ஒரு வகையில் கிடைக்கலாம்.

ஒரு நிமிடக் குறும்படம் பார்த்தேன். ஒரு பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள்.  அவள் அருகே இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்து கமெண்ட் அடித்தபடி அவள் அருகே நகர்ந்து நகர்ந்து வருகிறார்கள். அந்தப் பெண்ணும் பயந்தபடி இன்னும் தள்ளித்தள்ளி நகர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.

பள்ளிச் சீருடையில் பன்னிரெண்டு, பதிமூன்று வயதில் இரண்டு சிறுவர்கள் அந்த பஸ் ஸ்டாப்பிற்கு வருகிறார்கள். இந்தக் காட்சியைப் பார்க்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கும், இளைஞர்களுக்கும் இடையே அமர்கிறார்கள். இளைஞர்களைப் பார்த்து, ‘அண்ணா, பஸ் அந்தப் பக்கம்தான் வரும்… இந்தப்பக்கம் வராது…அங்கே பாருங்கள் அண்ணா!’ என்று பெண் அமர்ந்திருக்கும் திசைக்கு எதிர்திசையில் கைகளைக் காட்டுகிறார்கள். இளைஞர்கள் சற்றே கில்டியாகி வெட்கப்பட்டு தலைகுனிந்து வேகமாக எழுந்துகொள்ளவும், பஸ் வரவும் சரியாக இருந்தது.

You no need to be a Man to Save some One. You Should be MARD (Man Against Rape and Discrimination) என்ற வாசங்களோடு அக்குறும்படம் முடிகிறது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

 

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 576 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon