பதிவு எண்: 993 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 262
செப்டம்பர் 19, 2021 | காலை: 6 மணி
ஜெட்லாக்!
சில வருடங்களுக்கு முன்னர் நம் நாட்டு கல்வியை அமெரிக்க கல்வியுடன் ஒப்பிடும் ஒரு ஆவணப்பட பிராஜெக்ட்டுக்காக அமெரிக்கா சென்று திரும்பினேன். சில நாட்கள் ஜெட்லாக். அது குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தபோது ‘ஜெட்லாக்’ எனும் வார்த்தை நம் வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்திருப்பது குறித்து விரிவாக நம் தோழி பத்திரிகையில் கட்டுரை எழுதினேன். அது வழக்கத்துக்கும் மாறாக பெருத்த வரவேற்பை பெற்றது.
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு போகும்போது, இரு நாடுகளுக்குமுள்ள நேர வித்தியாசத்தால் நமக்கு ஏ ற் ப டு ம் ஒருவித சோர்வே Jet Lag.
பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்களை சில மணி நேரங்களுக்குள் விமானம் மூ ல ம் க ட ந் து வி டு கிறோம். ஆனால் நமது உடல் அவ்வளவு லேசில் மாறிவிடாது . அ து பழைய மணிக் கணக்குப்படி தான் தூக்கம், உணவு எல்லாவற்றையும் எதிர்பார்க்கும். இதிலிருந்து மீண்டு புதிய இடத்தின் நேரத்திற்கேற்றபடி தூக்கம், பசி ஆகியவை தானாக மாற சில நாட்கள் பிடிக்கும். ஆனால் நிச்சயமாக மாறிவிடும்.
அதுபோல தான் நாம் விட நினைக்கும் கெட்ட பழக்கத்தை விட்டொழித்து விட்டு புதிய நல்ல பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள சில நாட்கள்/வாரங்கள்/மாதங்கள் எடுக்கலாம்.
எப்படி ஒரு கெட்ட பழக்கம் வழக்கமாகிறதோ, அப்படி நல்ல பழக்கத்தையும் வழக்கமாக்கிக் கொள்ள முடியும். அப்படி வழக்கமாக சில காலங்கள் எடுக்கும். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். வழக்கமாகிப் போயிருக்கும் ஒரு பழக்கத்தை விட்டொழிக்கும் காலத்துக்கும், புதிய பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் காலத்துக்குமான இடைவெளியில் தான் நம் வெற்றி இருக்கிறது.
அந்த இடைவெளியை வெற்றிகரமாக கடந்து விட்டால் நாம் நினைத்ததை சாதித்து விடலாம். இந்த இடைவெளியை ஜெட்லாக் காலகட்டம் எனலாமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP