ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1025
அக்டோபர் 21, 2021 | வியாழன் | காலை: 6 மணி
ஆத்மாவும், அந்தராத்மாவும்!
ஒரு தகாத காரியத்தைச் செய்யுமாறு நமக்குத் தூண்டுதல் ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டத் தூண்டுதலை எழுப்புவதுதான் ஆத்மா. அந்தக் காரியத்தை மேற்கொள்வதால் வரக் கூடிய பின் விளைவுகளை அலசி ஆராய்ந்து அந்தக் காரியத்தை செய்ய வேண்டாம் என்று தடுக்கும் உள்ளுணர்வுதான் அந்தராத்மா.
ஆனால் அந்த உள்ளுணர்வையும் உணர்வின்றி அடங்கச் செய்யும் சர்வ வல்லமை பெற்றது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள்.
காரணம்… எதற்கும் நேரம் இல்லை.
நொடிக்கு நொடி புதுப்புது தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள்… எதைப் படிக்கிறோம் எதை விடுகிறோம் என்றுகூட சிந்திக்க நேரம் இல்லாமல் ஃபேஸ்புக்கில் மட்டுமில்லாமல் மனித மனதுக்குள்ளும் அப்டேட்டுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.
அந்த அப்டேட்டுகளில் சரி தவறை ஆராய நேரம் இல்லை… ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
இதில் இளைஞர்களை மட்டும் குறைசொல்லிப் பிரயோஜனமில்லை.
ஏன் எந்த அப்பா அம்மாவினாலும் தங்கள் மகனை / மகளை ‘எங்கே செல்கிறாய்… நாள் முழுவதும் எங்கிருக்கிறாய்…. என்ன செய்கிறாய்… ஏன் லேட்…. காலேஜில் இன்று என்ன நடந்தது…. என்ன வேலைக்கு முயற்சி செய்கிறாய் அல்லது ஆஃபீஸில் என்ன வேலை செய்கிறாய்… யார் இந்த புது ஃபெரெண்ட்…’ இதுபோன்ற கேள்விகளை கேட்க முடிவதில்லை.
தங்கள் பிள்ளைகளை கேள்வியே முடியாத அளவுக்கு தங்கள் நிலையை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்களே அதுதான் பிரச்சனையின் தொடக்கப் புள்ளி.
அந்த புள்ளியிலேயே விழித்துக்கொண்டால் நலமே விழையும். சிந்திப்போமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP