கனவு மெய்ப்பட[10] – அந்தப் பத்தாவது ஆப்பிள்! (minnambalam.com)

நம் சந்தோஷம் என்பது நம்முடைய செயல்பாடுகளினாலும், வெற்றியினாலும் கிடைக்கும் என்பது பொதுவிதியாக இருந்தாலும் பெரும்பாலும் நம்மை பிறர் பாராட்டினாலோ அல்லது நமக்குப் பிடித்த நபர் நம்முடன் வலிய வந்து பேசினாலோ நாம் மகிழ்ச்சியாகி விடுகிறோம். நம்முடைய மகிழ்ச்சி மற்றவர்களின் நடவடிக்கையால் தீர்மானிக்கப்படும்போது நாம் மற்றவர்களைச் சார்ந்து இயங்க ஆரம்பித்து விடுகிறோம். இந்த கண்ணோட்டம் இன்னும் ஆழமாகும்போது…

வாழ்க்கையின் OTP-6 (புதிய தலைமுறை பெண் – ஜனவரி 2019)

‘ஐராவதம் இறுதிச்சடங்குக்கு வந்த 40 பேர்: தமிழ் வாழும்!’ – இந்தத் தலைப்பும் செய்தியும் உணர்த்தும் உண்மை நெருப்பாய் சுடுகிறது. ‘சர்வதேச ஆய்வுலகுக்குக் கல்வெட்டுச் சான்றுகளோடு தமிழின் தொன்மையை எடுத்துரைத்தவர் ஐராவதம் மகாதேவன். ‘தமிழ், தமிழர்’என்று முகவரியுடன் அரசாள வருபவர்கள் மத்தியில் இந்திய ஆட்சிப்பணியைத் தமிழ் ஆய்வுக்காகத் துறந்து வாழ்நாள் முழுவதையும் கழித்தவர். அவருடைய கடைசி…

ஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்

வெளியீடு: நியூ சென்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் தொலைபேசி எண்கள்: 044-26251968, 044-26359906, 044-26258410 ‘என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் / லேப்டாப்  இருக்கு மேடம், வீட்டில் இருந்தே ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா?’ – பலரும் கேட்கின்ற கேள்வி இதுதான். இவர்களில் 99 சதவிகிதம் பேர் ஏற்கெனவே பணம் கட்டி ஏமாந்துபோனவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்கள் ஆரம்பத்தில்…

இங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்! (https://dhinasari.com)

என்னிடம் பேச வேண்டும் என ஒரு வாசகர் விரும்புவதாக சொல்லி எனக்கு லைனை கனெக்ட் செய்தார் என் உதவியாளர். ‘புவனேஸ்வரி அவங்ககிட்ட பேசணும்…’ முன் அல்லது பின் அடைமொழி இன்றி இப்படி பெரும்பாலும் யாரும் என்னிடம் பேசுவதில்லை என்பதால் சற்றே யோசனையுடன், ‘சொல்லுங்க… நான்தான் பேசறேன்…’ என்றேன். ‘உங்க புத்தகங்கள் நிறைய படித்திருக்கிறேன். காஞ்சிபுரம் அருகே…

ஷெண்பாவின் ‘நின்னைச் சரணடைந்தேன்…’

2019 சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் நேற்று நடைபெற்ற (06-01-2019, ஞாயிறு) ஷெண்பாவின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ புத்தக வெளியீட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி.முத்துராமன் அவர்கள் புத்தகத்தை வெளியிட நான் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன். நேற்று விடுமுறை தினமாக இருந்ததால் கொஞ்சம் கூட்டம் அதிகம். புத்தகக்…

படிக்கவும், பரிசளிக்கவும் ஏற்றப் புத்தகம்!

திரு ரமணன் அவர்கள் எழுதிய THE JOURNEY – FUELLED BY DETERMINATION என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தொழில் துவங்க விரும்பும் எவருக்கும் அந்த மனிதரின் வாழ்க்கை ஒரு பாடமாகயிருக்கும் இந்தப் புத்தகம் என்னைக் கவர்ந்ததில் ஆச்சர்யமில்லையே… எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து கம்ப்யூட்டர் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்க…

கனவு மெய்ப்பட[9] – பழக்கம்: பிடிவாதமும் நெகிழ்வும்! (minnambalam.com)

சிரிப்பு யோகா சொல்லிக்கொடுக்கும் நண்பர் சிரிப்பானந்தா அவர்களின் சமீபத்திய ஃபேஸ்புக் பதிவைப் படித்தேன். எய்ட்சால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கு சிரிப்பு யோகா சொல்லிக்கொடுக்கும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்த நண்பர்,  நிகழ்ச்சி முடிந்ததும் அவரிடம் ரகசியமாக வந்து ஒரு பாக்கெட்டைக் கொடுத்ததாகவும், அது  ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி, ஒருமுறை சாப்பிட்டால் பின்பு விட மாட்டீர்கள், ருசி சூப்பராயிருக்கும், என்று சொல்லி…

இங்கிதம் பழகுவோம்[13] பிடித்ததை செய்ய முயற்சி செய்! (https://dhinasari.com)

சென்ற சனிக்கிழமை மாலை ஒரு பள்ளிச் சிறுமியின் அம்மாவுக்கு அப்பயிண்ட்மெண்ட் கொடுத்திருந்தேன். அம்மாவும் பெண்ணும் சொன்ன நேரத்துக்கு மிகச் சரியாக வந்திருந்தார்கள். 14 வயது பள்ளிச் சிறுமி. நன்றாக படிக்கும் பெண். கொஞ்ச நாட்களாய் பள்ளியில் ஒரு பிரச்சனையில் சிக்கி இருந்தாள். படிப்பிலும் நாட்டம்போய் வீட்டில் எதற்கெடுத்தாலும் அம்மாவுடன் சண்டை. பள்ளியில் பிரச்சனையில் இருந்து தன்…

கனவு மெய்ப்பட[8] – வேண்டாமே ‘ஈ அடிச்சான் காப்பி!’ (minnambalam.com)

ஜேகே என பரவலாக அறியப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி  ஒரு புரட்சியாளர். அவரது சொற்பொழிவுகளிலும் எழுத்திலும் அலங்காரங்கள் இருக்காது. அவர் என்றுமே  நான் பேசப்போகிறேன், எனக்கு உண்மை தெரியும், என் பேச்சைக் கேட்டு உண்மையை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் என  சொன்னதேயில்லை.  மாறாக ‘நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக பயணிக்க இருக்கிறோம்’  என்றுதான்  தன்  சொற்பொழிவுகளைத்  தொடங்குவார். இவரைப்போலவே, மேடை…

தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கணும்!

2018 முழுவதும்… பிசினஸ் தொடர்பாக நான் சந்தித்து வருபவர்கள் அனைவருமே தன்னம்பிக்கைச் சிகரங்களாகவும், தாங்கள் பணிபுரியும் களம் வேறாக இருந்தாலும் தங்கள் தளத்தில் தொழில்நுட்பத்தின் உச்சத்தை இணைத்துக்கொண்டு தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் வியத்தகு மனிதர்களாக அமைந்தது சிறப்பு. அதிலும் அனைவருமே அவரவர்கள் வயதிலும், தங்கள் களத்தின் அனுபவத்திலும் உச்சம் தொட்டவர்கள். நம்மைச் சுற்றி பாஸிட்டிவ் வைப்ரேஷனை…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon