இங்கிதம் பழகுவோம்[23] கற்பனை மனிதர்களுக்கு ‘ரியாலிட்டி’ புரியாது! (https://dhinasari.com)
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வு! அவர் வரலாற்று நாவல்கள் எழுதும் எழுத்தாளர். அப்போதே அவருக்கு 70+ வயதிருக்கும். அவர் ‘பெண்கள் மேம்பாடு’ குறித்து ஒரு ஆய்வு செய்யப் போவதாகவும் அதற்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண்களை சந்தித்து தகவல் திரட்டுவதாகவும் அதற்காக சிறிய மீட்டிங் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் தொழில்நுட்பத் துறை…
ஃபேஸ்புக்கில் ஒரு வார்த்தை, ஓராயிரம் கோணங்கள்!
முகம் தெரியாத ஃபேஸ்புக் அறிமுகங்கள் இளைஞர்களின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து வருகிறது. சமூக வலைதளங்களில் இருந்து நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு வார்த்தையும் எத்தனையோ கோணங்களில் புரிந்துகொள்ளப்பட்டு வடிவமெடுக்கும் என்பதை மறக்காதீர்கள். யாருக்கும் அறிவுரை சொல்லி எதையும் மாற்றிவிட முடியாதுதான். ஆனாலும் நான் கடைபிடிக்கும் சில விஷயங்களை…
நுண்ணறிவு மென் மாமணி – சிவநேயப் பேரவை (March 10, 2019)
நங்கநல்லூரைச் சேர்ந்த சிவநேயப் பேரவை என்ற அமைப்பு மார்ச் 10, 2019 அன்று காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு அவருடைய 30 ஆண்டு கால சாஃப்ட்வேர் துறை பங்களிப்பினை போற்றும் விதமாக ‘நுண்ணறிவு மென் மாமணி’ விருது கொடுத்து சிறப்பித்தனர்.
கனவு மெய்ப்பட[18] – ஃபேஸ்புக் நம் பர்சனல் டைரி அல்ல! (minnambalam.com)
எங்கள் நிறுவனத்தில் மல்டிமீடியா பிராஜெக்ட்டுக்காக கிரியேட்டிவ் ஆர்டிஸ்ட்டுகள் தேவை இருந்ததால், இன்டர்வியூ செய்துகொண்டிருந்தோம். அதில் கடைசிவரை தேர்வாகி வந்தவருக்கு முப்பது வயதிருக்கும். நான் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் முதலில் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், இப்படியெல்லாம்கூட நடக்கிறதா என ஆச்சர்யமாக இருந்தது. ‘நல்ல பதவியில், நல்ல சம்பளத்தில்தானே இருந்தீர்கள். அதைவிட்டு ஏன் வெளியே வந்துவிட்டீர்கள்?’ என்ற…
ஃபேஸ்புக் இங்கிதங்கள்! (மின்னம்பலம் மார்ச் 9, 2019)
அண்மையில் என் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் “பேஸ்புக்கில் யார் யாருக்கெல்லாம் லைக் போடலாம், கமென்ட் செய்யலாம்… ஃபேஸ்புக்கை எப்படி கையாள்வது….” என்று இன்பாக்ஸில் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். வயது 65+. ஃபேஸ்புக்குக்குப் புதிது. நான் அவருக்கு எழுதிய பதிலுடன் இன்னும் சில பாயின்ட்டுகளை சேர்த்து இங்கு அனைவருக்கும் பொதுவாக்குகிறேன். ஃபேஸ்புக்கில்…
மகளிர் தினம் 2019
‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ – என்னைப் பார்க்கும் பலரும் சொல்வார்கள் ஆனால் இதற்காக நான் என்றுமே பிரயத்தனப்பட்டதில்லை. காரணம் என் குடும்ப அமைப்பு அப்படி. என் அம்மா… 40 வருடகாலம் தொலைபேசி துறையில் 24 மணிநேர சுழற்சிப் பணியில் இரவு பகல் பார்க்காமல் பணிக்குச் சென்று ஓய்வு பெற்றவர். தைரியம், உழைப்பு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம்…
இதுதாங்க ஃபெமினிசம்!
என் அலுவலகத்தில் இன்று ஒரு கிளையிண்ட் மீட்டிங். கிளையிண்ட் சிங்கப்பூரில் இருந்து ஒரு பிராஜெக்ட்டுக்காக வந்திருக்கிறார். அப்படியே என்னையும் சந்தித்துப் பேசினார். நானும் என் நிறுவனம் பற்றியும் தயாரிப்புகள் குறித்தும் சொன்னேன். ஆனால் துளியும் அவை அவர் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளப்படவில்லை என்பது அடுத்து அவர் சொன்ன ஒரு கருத்தில் நிரூபணமானது. ‘உங்கள் நிறுவனம் என் நிறுவனத்துடன்…
பெண்!
எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு டிடிபி சென்டர். தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங் இவற்றுடன் ஜெராக்ஸ், ஆதார் அட்டை சம்மந்தமான வேலைகள் என பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். அவர்கள் கடையில் 18 முதல் 20 வயதில் ஐந்தாறு இளம் பெண்கள் பணி புரிகிறார்கள். அந்தக் கடை ஓனர் தனது கிராமத்தில் இருந்து அவர்களை அழைத்து…
இங்கிதம் பழகுவோம்[22] சோடச உபசாரம்! (https://dhinasari.com)
எங்கள் குடும்ப நண்பர். வயது 80+ இருக்கும். எங்கள் அப்பா அம்மாவுடன் பணிபுரிந்தவர். என் சிறுவயது முதலே அவரை தெரியும். அவ்வப்பொழுது போன் செய்து பேசுவார். என் மீது தனி பாசம் உண்டு. அவர் சொல்வதை பொறுமையாக காதுகொடுத்து கேட்பதும் ஒரு காரணம். நானும் என் தம்பி தங்கையும் சிறுவயதில் 5 வருடங்கள் கர்நாடக இசை…
பள்ளி பாடத்திட்டத்தில் நான் எழுதிய வாழ்வியல் புத்தகங்கள்!
கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக என் சாஃப்ட்வேர் நிறுவனம் மூலம் நான் பெற்றுவரும் தொழில்நுட்ப அனுபவங்களை புத்தகங்களாக அந்தந்த காலகட்டங்களிலேயே பதிவு செய்து வருகிறேன். அது எண்ணிக்கையில் 100-ஐத் தாண்டியதும் அனைவரும் அறிந்ததே. என்னுடைய இந்த நீண்ட தொழில்நுட்பப் பயணத்தில் என் படைப்புகளுக்கு (புத்தகங்கள், ஆடியோ வீடியோ படைப்புகள், அனிமேஷன் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்) சென்னை பல்கலைக்கழகம்,…







