2011 டிசம்பர் மாதம் வங்கக் கடலில் உருவாகி, வலுவடைந்துள்ள ‘தானே’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளுர், நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
கட்டிடங்கள், மரங்கள், மின் விநியோகக் கட்டமைப்பு என பலவற்றிலுமாக ஏராளமான பொருட்சேதங்களுடன் உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
பிடுங்கியெறியப்பட்ட மரங்கள் சாலைகள் நெடுகிலும் வழிமறித்து நிற்பதால், பல பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக நெய்வேலி நிலக்கரி அனல் மின் நிலையதத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தும் தடைபட்டிருந்தது.
தமிழகத்தையே உலுக்கிய ‘தானே’ புயல் பாதிப்பினால் ஏற்பட்ட துயர் துடைக்கும் நிவாரணத்துக்காக
ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பாக விகடனுடன் இணைந்து அவர்களின் ‘தானே’ துயர் துடைப்போம் திட்டத்துக்காக நிதி உதவி அளித்தோம்.
மீடியா செய்திகள்