ஆன்லைன் இங்கிதங்கள்

ஆன்லைன் இங்கிதங்கள்

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் – சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வு புத்தகத்தை ஆன்லைனில் ஏற்படுத்தும் அத்தனை அச்சுறுத்தல்களுக்குமான தீர்வு குறித்து சென்னை கமிஷ்னர் அலுவலகத்தின் வழிகாட்டலுடன் நான் எழுதிய புத்தகம் விகடன் பிரத்தில் விற்பனையில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து இப்போது லேட்டஸ் தொழில்நுட்ப வளர்ச்சிகளுடன் புதிதாய் முளைத்திருக்கும் ஆன்லைன் அச்சுறுத்தல்களுக்கான தீர்வுகள் குறித்து  ‘ஆன்லைன் இங்கிதங்கள்!’ என்ற நூலுக்கு ஆயத்தமாகியுள்ளேன்.

யாருக்கும் தெரியாது என நினைத்து ஆன்லைனில் செய்கின்ற தவறுகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். அப்படி தவறுகள் அம்பலப்படுத்தப்படும்போது எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்த விழிப்புணர்வு புத்தகமாக மட்டும் இல்லாமல் ஆன்லைன் பிரச்சனைகள் எதுவானாலும் எங்கு புகார் அளிக்கலாம், எப்படி புகார் அளிக்க வேண்டும், எப்படிப்பட்ட தண்டனைகள் கிடைக்கும் என்பது குறித்த அத்தனை விவரங்களுடன் முழுமையான நூலாக வெளிவரும்.

அந்த நூலில் இருந்து சில உங்கள் பார்வைக்கு….

‘ஆன்லைனில் மெசஞ்சரிலோ வாட்ஸ் அப்பிலோ இமெயிலிலோ அல்லது இன்னபிற வசதிகள் மூலம் உங்களிடம் தவறாக நடக்கும் நபரை பிளாக் செய்வதற்கு முன் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்… சாட் செய்கின்ற அத்தனை கான்வர்சேஷனையும் சாஃப்ட் காப்பியாக காப்பி எடுத்து பத்திரப்படுத்துங்கள்…. அந்த ஆதாரத்தை வைத்துத்தான் சைபர் க்ரைமிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ ரிப்போர்ட் செய்ய முடியும்…

இப்போதெல்லாம் ஃபேஸ்புக் டிவிட்டர் ஐடிக்களையும் வெளிநாட்டுக்கு படிப்புக்காகவோ வேலைக்காகவோ செல்வதற்குக் கேட்கிறார்கள். உங்களை கண்காணிக்கவே இது என்பதையும் மறந்துவிடாதீர்கள்…

உள்நாட்டிலும் பல எம்.என்.சி நிறுவனங்களில் உங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் ஐடிக்கள் மூலம் உங்களை பேக்கிரவுண்ட் வெரிஃபிகேஷன் செய்கிறார்கள் என்பதும் தெரிந்திருக்கலாம்…

ஆன்லைனில் உங்கள் பதிவுகள் கண்ணியமாக இருக்கட்டும், இங்கிதமாக பதிவிடுங்கள்…

கண்ணாடிக் கூண்டுக்குள் பயணிக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயல் மூலமும் நீங்கள் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள்…’

விரைவில் நூல் வடிவில் உங்கள் ஆன்லைன் அச்சுறுத்தல்களுக்கு தீர்வளிக்க வருகிறது…

எழுத்தும் ஆக்கமும்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜூன் 3, 2019

(Visited 63 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon